சென்னை: கோவிட் -19 (COVID-19) நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக முழுமையான ஊரடங்கு கருத்தில் கொண்டு இந்த மாதம் (ஜூலை) நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளும் மூடப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து மாவட்ட மேலாளர்களும் ஜூலை 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் (Tasmac Shop) சில்லறை கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் தலைமையகத்திலிருந்து அதன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலத்தில் உள்ள மொத்த 5,300 மதுபான விற்பனை நிலையங்களில், கிட்டத்தட்ட 4,500 இப்போது செயல்படுகின்றன. மீதமுள்ளவை பெரும்பாலும் சென்னையில் (Chennai Tasmac) அமைந்துள்ளன மற்றும் செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில கடைகள் மூடப்பட்டுள்ளன.


பிற செய்தி | மதுபானம் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்கிய Swiggy மற்றும் Zomato



பிற செய்தி | TASMAC கடைகளை திறப்பதில் புதிய நேர கட்டுப்பாடு., தமிழக அரசு அறிவிப்பு


இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது ஜூலை மாதத்தில் உள்ள 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு (Lockdown in Tamil  Nadu) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, மேலும் 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 3,882 பேரில் சென்னையில் மட்டும் 2,182 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 60,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.