மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இஎம்ஐ கணக்கீடு: மாருதி ஸ்விஃப்ட் நாட்டின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாகும். இது பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் இதயத்தை கவர்ந்த வாகனமாக இருந்து வருகிறது. கடந்த மாதம், நாட்டில் அதிகம் விற்பனையான கார் இதுவாகும். மாருதி சுசுகி நிறுவனம் மார்ச் மாதத்தில் இந்த காரின் 17,559 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.9.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொகையை மொத்தமாக செலுத்தி சிலரால் வாங்க முடியாமல் போகலாம். அப்படிப்பட்டவர்களுக்கான பதிவாக இது இருக்கும். மாருதி ஸ்விஃப்ட்டின் டாப் மாடலை கடனில் வாங்குவதற்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தவணை செலுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


மாருதி ஸ்விஃப்ட்டின் டாப்-எண்ட் மாடல் Swift ZXI Plus DT AMT ஆகும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.9.03 லட்சம். இருப்பினும், டெல்லியில் ஆன்ரோட் விலை சுமார் 10.12 லட்சமாக உள்ளது. நீங்களும் இந்த காரை வாங்க நினைத்தால், இதற்கான இஎம்ஐ கணக்கீடு என்னவாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


ரூ 1 லட்சத்தில் டாப் மாடல் 


1 லட்சம் (10% முன்பணம்) செலுத்தி நீங்கள் கார் வாங்க விரும்பினால், இந்த சூழ்நிலையில், நீங்கள் வங்கியில் கடன் வாங்கலாம். அதன் வட்டி விகிதம் 10% என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் கடன் காலத்தை 1 முதல் 7 ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். இந்த உதாரணத்தில் கடன் கால அளவை, 5 வருட காலமாக வைத்துக்கொள்ளலாம். 


மேலும் படிக்க | FasTag ஆன்லைனில் புக் செய்ய புதிய வசதி..! பேடிஎம் இருந்தால் போதும்


இந்த வகையில், நீங்கள் ஒரு மாதத்திற்கு தோராயமாக ரூ.19,381 இஎம்ஐ செலுத்த வேண்டி வரும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் உங்களின் மொத்த கடன் தொகைக்கு (ரூ.9.12 லட்சம்) கூடுதலாக ரூ.2.50 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.


எஞ்சின் மற்றும் அம்சங்கள்:


மாருதி ஸ்விஃப்ட் 1.2லி டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 90PS மற்றும் 113Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 


மைலேஜை அதிகரிக்க எஞ்சினில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பயன்முறையில் காரின் மைலேஜ் லிட்டருக்கு 22 கிமீ/லிட்டர் மற்றும் சிஎன்ஜி முறையில் 30.90 கிமீ ஆகும். இதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஸ்விஃப்ட் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவர் இருக்கை, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஏசி மற்றும் எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி ஹெட்லைட்களைக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | Safest Cars in India: பயம் இல்லாமல் பயணிக்கணுமா? இவைதான் டாப் 5 பாதுகாப்பான கார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ