கார் பேட்டரி பராமரிப்பது எப்படி? இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்...

Car Battery Maintenance Tips: கார் பேட்டரியின் ஆயுளை அதிகரிப்பது மிகவும் எளிதானது, இந்த ஐந்து விஷயங்களை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். நீங்கள் எந்தவித சிக்கலையும் சந்திக்க மாட்டீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 15, 2023, 08:41 PM IST
  • பேட்டரி வீக்கா இருந்தால் காரை ஸ்டார்ட் செய்வதில் சிக்கல் ஏற்படும்.
  • பேட்டரியில் உள்ள நீரின் மட்டத்தை தவறாமல் சரிபார்க்கவும்.
  • மலிவான பேட்டரியை ஒருபோதும் காரில் பயன்படுத்தக்கூடாது.
கார் பேட்டரி பராமரிப்பது எப்படி? இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்... title=

கார் பேட்டரி பராமரிப்பு குறிப்புகள்: உங்களிடம் நான்கு சக்கர வாகனம் இருந்தால், அதன் பராமரிப்பு பற்றிய தகவல்களை பற்றி அறிந்திருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் வாகனம் ஓட்டிச் செல்லும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதை சுலபமாக தீர்ப்பது மட்டுமல்லாமல், பணத்தை வீணடிப்பதையும் தவிர்க்கலாம். நான்கு சக்கர வாகனத்தில் பேட்டரியின் முக்கியத்துவம் மிக அதிகம். பேட்டரி பழுதாகிவிட்டால் அல்லது சில காரணங்களால் வேலை செய்யவில்லை என்றால், காரை ஸ்டார்ட் செய்வதில் சிக்கல் ஏற்படும். உங்கள் காரில் நிறுவப்பட்ட பேட்டரியை அவ்வப்போது பராமரிப்பது மற்றும் அதனை ஆய்வு செய்வது மிக சிறந்தது. அதன் ஆயுள் அதிகரிக்கும். இதன் காரணமாக் வாகனம் இயக்குவதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எனவே காரின் பேட்டரியை குறித்து சில குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்ப்போம். வாருங்கள் காரின் பேட்டரி பராமரிப்பு (Maintenance Tips For Car Battery) பற்றி அறிந்துக்கொள்ளுவோம். 

காரில் பேட்டரியுடன் மின்சார வயர்கள் இறுக்கமாக இணைக்கப்பட்டு இருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றால், காரை ஓட்டிச்செல்லும் போது மேடுபள்ளம் காரணமாக லூசா இருக்கும் மின்சார வயர்கள்கள் மூலம் சரியான நேரத்தில் மின்சாரம் காரை சென்றடைய முடியாது. இதன் காரணமாக பேட்டரியின் ஆயுளும் குறைகிறது. பேட்டரி வயர்கள் சரியாக இறுக்கமாக இருக்க வேண்டும். இவற்றுக்கு கிளிப்களைப் பயன்படுத்தலாம்.

பேட்டரி டெர்மினலுக்கு அருகில் தேங்கும் அமிலத்தை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். காரின் முதல் ஆற்றல் பேட்டரி ஆகும். பேட்டரி சரியான நேரத்தில் பராமரிப்பு  செய்ய வேண்டும். பேட்டரியில் உள்ள நீரின் மட்டத்தை தவறாமல் சரிபார்க்கவும்.

மேலும் படிக்க: மொபைலில் சார்ஜ் விரைவில் காலியாகிறதா? இந்த ஆப்ஸ்லாம் உடனே டெலீட் பண்ணிடுங்க!

பெரும்பாலும் மக்கள் காரை சர்வீஸ் செய்யும் போது பேட்டரியின் டெர்மினல்களில் கிரீஸைப் பயன்படுத்துகின்றனர். பேட்டரி டெர்மினல்களில் கிரீஸ் போடுவதும் அவற்றை சேதப்படுத்தும். எனவே டெர்மினலில் கிரீஸைப் பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக பெட்ரோலியம் ஜெல்லி அல்லது வாஸ்லைனைப் பயன்படுத்துங்கள்.

காரில் நிறுவப்பட்ட பேட்டரியின் தரத்தில் நீங்கள் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் சந்தையில், குறைந்த விலையில் அனைத்து விதமான தரம் குறைந்த பொருட்களும் கிடைக்கின்றன, அத்தகைய சூழ்நிலையில், ஒருவரின் ஆலோசனை அல்லது சலுகையைப் பார்த்து மலிவான பேட்டரியை ஒருபோதும் காரில் பயன்படுத்தக்கூடாது. ஒரு நல்ல நிறுவனத்தின் பேட்டரியை எடுத்துக்கொள்வதன் நன்மை என்னவென்றால், அவை நிலையான தரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. எனவே, அவற்றில் செயலிழப்பு சாத்தியம் குறைகிறது. அந்த பேட்டரி சரியாக செயல்படவில்லை என்றால் டீலரிடம் சென்றோ அல்லது நிறுவனத்திடம் தகவல் கொடுத்தோ எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளீர்கள் அல்லது பல நாட்களாக காரை இயக்கவில்லை என்ற பட்சத்தில், மீண்டும் நீங்கள் காரில் எங்காவது செல்ல வேண்டியிருந்தால், உங்கள் காரை ஸ்டார்ட் செய்யும் போது சிக்கலை சந்திக்கிறீர்கள். ஏனென்றால் பேட்டரியின் ஆற்றல் தொடர்ந்து வெளியேற்றம் காரணமாக இது நிகழ்கிறது. நீங்கள் காரை வீட்டிலோ, அலுவகலத்திலோ அல்லது வேறு ஏதாவது இடத்திலோ பார்க்கிங் செய்யும் போதெல்லாம், காரின் ஹெட்லைட்கள், காரின் பார்க்கிங் விளக்குகள் மற்றும் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள். காரின் விளக்குகள் தொடர்ந்து எரிந்தால், அடுத்த முறை காரை ஸ்டார்ட் செய்வதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் படிக்க: Smart Phone Battery: ஸ்மார்ட்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க ‘சில’ டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News