புதுடெல்லி: அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 398 ரூபாய்க்கான இந்த திட்டத்தை BSNL ஜனவரி மாத தொடக்கத்தில் விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கடைசி தேதி ஏப்ரல் 9 அன்று வைக்கப்பட்டது, ஆனால் இப்போது BSNL அதை 90 நாட்கள் நீட்டித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 8 வரை ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பெற முடியும்


BSNL தனது சந்தாதாரர்களுக்கு, ரூ .398 சிறப்பு கட்டண வவுச்சரை (STV) அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் நீட்டிப்புக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் ஜூலை 8 வரை இந்த திட்டத்தின் பயன்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். டெலிகாம் டாக்கின் அறிக்கையின்படி, BSNL இந்த ரீசார்ஜ் திட்டத்தை ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. BSNL-லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற தரவு, இலவச குரல் அழைப்பு மற்றும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் வசதி போன்ற பல நன்மைகளைப் பெறுவார்கள்.


ALSO READ: BSNL-ன் அதிரடியான 47 ரூபாய் recharge plan: அரண்டுபோன Airtel, Jio, Vi


நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் கிடைக்கும் 


ஜனவரியில், இந்தத் திட்டம் சென்னை மற்றும் ஹரியானா வட்டாரங்களுக்காக துவக்கப்பட்டது. ஆனால் இப்போது BSNL-லின் இந்த ரீசார்ஜ் திட்டம் (Recharge Plans) நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், இந்த திட்டத்தில் முன்பு கிடைத்த அதே நன்மைகள் இப்போது, அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.  BSNL-லின் ரூ .398 ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு 30 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், வேக வரம்பு இல்லாமல், இதில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற தரவு (Unlimited Data) கிடைக்கும். BSNL-லின் இந்த திட்டம் இன்று, ஏப்ரல் 10 முதல் நாடு முழுவதும் கிடைக்கும். அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப நாட்களுக்கு, இந்த திட்டம் 90 நாட்களுக்கு இருக்கும்.


ALSO READ: Reliance Jio-வின் 3 அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்: Miss பண்ணிடாதீங்க, விவரம் உள்ளே


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR