BSNL Rs 199 பிளானில் மாற்றம், இப்போது கிடைக்கும் இன்னும் அதிக பயன்கள்

BSNL அவ்வப்போது பல திட்டங்களை புதுப்பித்துள்ளது. சமீபத்தில், டிசம்பரில், நிறுவனம் 1999 ரூபாய் திட்டத்திலும் மாற்றங்களைச் செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2021, 03:28 PM IST
  • BSNL பிப்ரவரி 1 முதல் தனது 199 ரூபாய் திட்டத்தை (BSNL ரூ .199 Plan) மாற்றியுள்ளது.
  • இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்-சும் இலவசமாக கிடைக்கிறது.
  • BSNL மற்றும் MTNL ஆகியவை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருகின்றன.
BSNL Rs 199 பிளானில் மாற்றம், இப்போது கிடைக்கும் இன்னும் அதிக பயன்கள்  title=

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) பிப்ரவரி 1 முதல் தனது 199 ரூபாய் திட்டத்தை (BSNL ரூ .199 Plan) மாற்றியுள்ளது. அடுத்த முறை இந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யப் போகிறீர்கள் என்றால், இந்த மாற்றப்பட்ட திட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். BSNL Chennai ட்வீட் மூலம் இந்த தகவலை பகிர்ந்துள்ளது. இதன்படி, இந்த திட்டத்தில், பயனர்கள் முன்பை விட இப்போது அதிக வசதிகளைப் பெறுகின்றனர்.

இலவச குரல் அழைப்பு பகிர்தல் வசதி (Free voice call forwarding facility)

செய்திகளின்படி, இப்போது இந்த திட்டத்தில் இலவச குரல் அழைப்பு பகிர்தல் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், பயனர்களுக்கு ஃபேர் யூசேஜ் கொள்கையின் (FUP) வரம்பற்ற ஆஃப் நெட் மற்றும் ஆன் நெட் வாய்ஸ் கால் வசதி கிடைக்கும். முன்னதாக, இந்த திட்டத்தில் 300 நிமிட ஆன் நெட் அழைப்புகள் கிடைத்தன.

இந்த திட்டத்தில் மாதாந்திர தரவு மற்றும் மாற்றம் செய்வதற்கான வசதி அதாவது ரோலோவர் வசதியும் கிடைக்கிறது. லேண்ட்லைன் உள்ளிட்ட மற்ற எண்ணிலும் இலவச குரல் அழைப்பு பகிர்தல் வசதி (Free voice call forwarding facility) கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: வெறும் Rs.129-ல் 300-க்கு மேல் டிவி சேனல்கள், 8000 திரைப்படங்கள்: அசத்தலான BSNL Prepaid Plan

இந்த திட்டத்தில் இவ்வளவு தரவு கிடைக்கிறது

BSNL-ன் ரூ 199 திட்டத்தில் 25 ஜிபி மாதாந்திர தரவு மற்றும் 75 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதி ஆகியவை கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்-சும் இலவசமாக கிடைக்கிறது.

வீட்டு நெட்வொர்க்கைத் தவிர, தேசிய ரோமிங் மற்றும் எம்டிஎன்எல் ரோமிங்கிலும் ஆன்லைன் அழைப்பின் பயன் கிடைக்கும். BSNL அவ்வப்போது பல திட்டங்களை புதுப்பித்துள்ளது. சமீபத்தில், டிசம்பரில், நிறுவனம் 1999 ரூபாய் திட்டத்திலும் மாற்றங்களைச் செய்துள்ளது.

நிறுவனங்கள் மீது இழுபறி (BSNL மற்றும் MTNL)

அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களான - பாரத் சஞ்சர் நிகாம் லிமிடெட் (BSNL) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (MTNL) ஆகியவை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களையும் மூடுவதைப் பற்றியும் பேசப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன.

ALSO READ: Jio, Airtel, Vi நெட்வொர்க்குகளின் மிக குறைந்த விலை டேட்டா பிளான்களின் முழு விவரம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News