Google Pixel 7: வெறும் ரூ. 20,000-க்கு இந்த அசத்தலான போனை வாங்குவது எப்படி?
Google Pixel 7A: இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், பிரீமியம் ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சல் 7க்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.
கூகுள் பிக்சல் 7 விலைக் குறைப்பு: கூகிள், மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் I/O நிகழ்வில் கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) பற்றி அறிவிக்கலாம். புதிய ஸ்மார்ட்போன் வெளிவருவதற்கு முன்பே, வாடிக்கையாளர்கள் கூகுள் பிக்சல் 7ஐ குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு உள்ளது. நீங்களும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் இருந்து, ஆனால், உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 20,000 ரூபாயில் பிரீமியம் ஸ்மார்ட்போனை வாங்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.
இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், பிரீமியம் ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சல் 7க்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடி பிக்சல் 7 இன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. வெறும் ரூ. 20,000 -இல் இந்த ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.
Google Pixel 7: என்னென்ன தள்ளுபடிகள் கிடைக்கும்?
கூகுள் பிக்சல் 7 இன் அசல் விலை ரூ. 59,999 ஆகும். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் 5% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு, இந்த போனின் விலை ரூ.56,999 ஆகிறது. மறுபுறம், ஆக்சிஸ் வங்கி, எஹ்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ அல்லது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய வங்கிகளின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.7,000 வரை தள்ளுபடி பெறலாம்.
பரிமாற்றச் சலுகையும் உள்ளது
இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு இதில் ஒரு பரிமாற்ற சலுகை அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. தங்கள் பழைய போனை பரிமாற்றிக்கொண்டால், பயனர்களுக்கு ரூ. 30,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். எனினும், இந்த சலுகையை பெற தங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருப்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | BSNL சூப்பரான ரீசார்ஜ் பிளான்: வெறும் 269 ரூபாயில் எக்கச்சக்க நன்மைகள்!!
இதைத் தவிர இஎம்ஐ -இல் இந்த போனை வாங்கும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களிடம் உள்ளது. மாதாந்திர இஎம்ஐ ரூ.1,949 செலுத்தி இந்த போனை வாங்கலாம்.
Google Pixel 7: டிஸ்ப்ளே மற்றும் கேமரா
கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் முழு HD+ OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 2400 * 1080 பிக்சல் ரெசல்யூஷன் கிடைக்கும். மேலும் இதில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர போனின் திரையில் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கண்ணாடியும் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 7 இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 50MP பிரதான லென்ஸ் மற்றும் 12MP இரண்டாம் நிலை சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்க 10.8MP கேமரா உள்ளது.
Google Pixel 7: பேட்டரி மற்றும் செயலி
கூகுள் பிக்சல் 7 4270 எம்ஏஎச் பேட்டரியைப் பெறுகிறது. இந்த போனில் டைப் சி போர்ட் கிடைக்கிறது. கூகுள் பிக்சல் 7 ஆண்ட்ராய்டு 14 இல் இயங்குகிறது. இதன் செயலி பற்றி பேசுகையில், டென்சர் ஜி2 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது.
இப்போது வாடிக்கையாளர்கள் Pixel 7a ஸ்மார்ட்போனுக்காக அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை. மே 10 அன்று நடைபெறவிருக்கும் I / O நிகழ்வில் நிறுவனம் Pixel 7a ஐ அறிமுகப்படுத்தலாம். இதனுடன், பயனர்கள் ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டையும் பெறலாம்.
மேலும் படிக்க | OnePlus, Xiaomi ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிரடியாக குறைந்தன: முந்துங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ