OnePlus, Xiaomi ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிரடியாக குறைந்தன: முந்துங்கள்

Huge Discount on Premium Smartphone: ஸ்மார்ட்போன வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால், இப்போது அதற்கான சரியான நேரமாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2023, 11:29 AM IST
  • Moto G72: 7 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது.
  • Moto Edge 30: 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி.
  • Xiaomi 12 Pro: 27 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி.
OnePlus, Xiaomi ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிரடியாக குறைந்தன: முந்துங்கள் title=

பிரீமியம் ஸ்மார்ட்போனில் பெரும் தள்ளுபடி: நீங்கள் பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க விருப்பம் கொண்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சில ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளன. இந்த பட்டியலில் OnePlus 10R, Xiaomi 12 Pro, Xiaomi 11 Lite NE 5G போன்ற போன்கள் அடங்கும். இவற்றில், 5000mAh பேட்டரி, 108MP கேமரா போன்ற பல அற்புதமான அம்சங்கள் உள்ளன. இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை இந்த ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகின்றன. இந்த அசத்தலான போன்களில் கிடைக்கும் சலுகை விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Moto G72: 7 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது

Moto G72 ஸ்மார்ட்போனை மிக மலிவான விலையில் வாங்க இப்போது நல்ல வாய்ப்பு உள்ளது. இந்த போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த போன் இரண்டு வகைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனின் அடிப்படை மாறுபாட்டில் (பேஸ் வேரியண்ட்) ரூ.7,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.21,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 செயலி உள்ளது. இது 5000எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

Moto Edge 30: 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி

மோட்டோ எட்ஜ் 30 கடந்த ஆண்டு மே 12 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் 6GB + 128GB மாறுபாட்டில் 8,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் 8 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டிற்கு 10,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு, இந்த போன்களின் விலை ரூ.22,999 மற்றும் ரூ.24,999 ஆக குறையும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி செயலி உள்ளது. இது 4250எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

மேலும் படிக்க | முதல்முறையா இப்படியொரு ஆஃபர்..! வைஃபை கனெக்சன் வாங்கினால் ஸ்மார்ட் டிவி இலவசம்

Xiaomi 11 Lite 5G: அதிரடி தள்ளுபடி

Xiaomi 11 Lite 5G ஸ்மார்ட்போன் 2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இரண்டு வகைகளில் அறிமுகம் ஆனது. தற்போது அதன் 6GB + 128GB மாறுபாடுக்கு ரூ. 5,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. 8GB + 128GB மாறுபாட்டிற்கு ரூ. 8,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு, இந்த போன்களின் விலை ரூ.26,999 மற்றும் ரூ.25,999 ஆக குறையும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி செயலி உள்ளது, இது 4250எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

Xiaomi 12 Pro: 27 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி

நீங்கள் சியோமி 12 ப்ரோவை மலிவாக வாங்க விரும்பினால், இப்போது அதற்கான சரியான நேரமாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில், ரூ. 27,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சலுகை அதன் இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. 8 ஜிபி + 256 ஜிபி வகைக்கு 27 ஆயிரம் தள்ளுபடியும், 12 ஜிபி + 256 ஜிபி வகைக்கு 28 ஆயிரம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, இந்த போன்களின் விலை ரூ.52,999 மற்றும் ரூ.56,999 ஆக குறையும். இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 8100-மேக்ஸ் செயலி  கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4600எம்ஏஎச் பேட்டரியுடன் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கும்.

OnePlus 10R: 35,000 ரூபாய் வரை தள்ளுபடி

OnePlus 10 R ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு மே 4 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் இரண்டு வகைகளிலும் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன. 8 ஜிபி + 128 ஜிபி வகைக்கு 7 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கிறது. அதனுடன் 12 ஜிபி + 256 ஜிபி மாறுபாடு 11 ஆயிரம் வரை தள்ளுபடி பெறுகிறது. இதன் பிறகு, இந்த போன்களின் விலை ரூ.31,999 மற்றும் ரூ.36,999 ஆக குறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8100-மேக்ஸ் செயலி உள்ளது. இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

மேலும் படிக்க | Whatsapp Alert: உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக்கர்களிடமிருந்து பாதுகப்பது எப்படி? எளிய டிப்ஸ் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News