ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் ஓலா மின்சார ஸ்கூட்டரின் அறிமுக தேதியை முடிவு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ஒரு ட்வீட் மூலம் அறிமுக தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதற்கான குறிப்புகளை அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூடுதலாக, ஓலாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்கூட்டருக்கான மற்றொரு வாக்கெடுப்பையும் ட்விட்டரில் தொடங்கினார். இது நிறுவனம் ஒரு தனித்துவமான விநியோக அனுபவத்தை, அல்லது குறைந்தபட்சமாக அதை விரும்புவோருக்கு அதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் என்பதைக் குறிக்கிறது.


சமீபத்திய ட்வீட்டில், ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் புதிய ஸ்கூட்டரின் அறிமுக தேதி குறித்து நிறுவனம் தீவிரமாக கலந்தாலோசித்து வருவதாகக் கூறி ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். இதுவரை, நிறுவனம் அறிமுக தேதி குறித்து எதுவும் கூறாமல் இருந்தது. ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஜூலை நடுப்பகுதியில் தொடங்கியது.



அறிமுக தேதி தவிர, புதிய ஓலா (Ola) ஸ்கூட்டருக்கான டெலிவரி சிஸ்டம் பற்றிய குறிப்புகளையும் சிஇஓ வெளியிட்டார். மின்சார ஸ்கூட்டரை எவ்வாறு டெக்லிவரி செய்யலாம் என அகர்வால் தனது ஃபாலோயர்களை கேட்டு ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார். கருத்துக் கணிப்பில், ‘ஃபிசிக்கல் டீலர்ஷிப்/ஸ்டோர்' மற்றும் 'ஆன்லைன் மற்றும் ஹோம் டெலிவர்ட்' ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் இருந்தன. கருத்துக் கணிப்பில் 'ஹோம் டெலிவர்ட்’ என்ற ஆப்ஷனுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.


அறிமுக தேதி தவிர, புதிய ஓலா ஸ்கூட்டருக்கான டெலிவரி சிஸ்டம் பற்றிய குறிப்புகளையும் சிஇஓ வெளியிட்டார். மின்சார ஸ்கூட்டரை எவ்வாறு டெலிவரி செய்யலாம் என அகர்வால் தனது ஃபாலோயர்களை கேட்டு ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார். கருத்துக் கணிப்பில், ‘ஃபிசிக்கல் டீலர்ஷிப்/ஸ்டோர்' மற்றும் 'ஆன்லைன் மற்றும் ஹோம் டெலிவர்ட்' ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் இருந்தன. கருத்துக் கணிப்பில் 'ஹோம் டெலிவர்ட்’ என்ற ஆப்ஷனுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.


ALSO READ: Ola Electric Scooter: அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை; கருத்தை கேட்ட ஓலா


மின்சார வாகனத்தின் விலை மற்றும் சரியான வரம்பு ஆகியவற்றைத்  தவிர ஸ்கூட்டர் பற்றிய பல தகவல்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. விலையைப் பொறுத்தவரை, ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஒரு விலையுடன் சந்தையில் நல்ல போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரைப்  (Electric Scooter) பொறுத்தவரை, வெறும் 18 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 50 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம். இந்த சார்ஜில் சுமார் 75 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. முழு சார்ஜில் இந்த ஸ்கூட்டர் சுமார் 150 கி.மீ ரேஞ்சை அளிக்கின்றது. எனினும் இந்த மதிப்பீடுகள் மாறக்கூடும்.


சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனது மின்சார ஸ்கூட்டர் 10 தனித்துவமான மற்றும் துடிதுடிப்பான வண்ணங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


மிக விரைவில் நடக்கவிருக்கும் ஓலா ஸ்கூட்டர் (Ola Electric Scooter) அறிமுக விழாவில் இந்த வண்ணங்களின் துல்லியமான பெயர்கள் அறிவிக்கப்படும். நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இருந்து மேட் மற்றும் பளபளப்பான ஷேட்களில் நிறத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன்கள் கிடைக்கும். மேலும், சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்களிலும் துடிப்பான ஷேட்களையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.


ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவை இப்போதும் வாடிக்கையாளர்கள் செய்யலாம். ரூ. 499 என்ற மலிவு விலையில் இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம்.


ALSO READ: Ola Electric Scooter: அட்டகாசமான டீசர் ரிலீஸ், சாலைகளில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR