COVID-19 தொற்றுநோய் வேகமாக பரவி வரும் நிலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் 1 மீண்டும் திறப்பதாக இருந்த இலங்கை, அதை தாமதப்படுத்த உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல்  கடைசியில் இருந்து COVID-19 சமூக அளவில் பரவும் நிலை ஏற்படாததாதால் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் தனது சர்வதேச விமான நிலையங்களை திறக்க வேண்டும் என இலங்கை அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.


ALSO READ | தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்த காங்கிரஸ்... லடாக் கவுன்சிலர் அதிர்ச்சி தகவல்...!!!


கொழும்பு: இலங்கை தனது சர்வதேச விமான நிலையத்தை (Colombo International Airport ) ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் மீண்டும் திறக்க வேண்டும் என்று எடுத்த முடிவை மாற்றிக் கொண்டு அதனை மேலும் தாமதப்படுத்தியுள்ளது, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டை சேர்ந்தவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.


கோவிட் -19 (COVID-19) வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மார்ச் மாதத்தின் நடுவில் இலங்கை தனது சர்வதேச விமான நிலையங்களை மூடியது.


இலங்கையில் (Sri Lanka) ஏப்ரல் மாத கடைசியில் இருந்தே COVID-19 சமூக அளவில் பரவும் நிலை எதுவும்  உருவாகாததால் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் தனது சர்வதேச விமான நிலையங்களை திறக்கலாம என அரசு நினைத்தது.


இந்நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி கொழும்பு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்படாது, அது மேலும் தாமதமாகும் என்று விமான நிலைய ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.


ALSO READ |அதிர்ச்சி தகவல்... வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!!


இலங்கை வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியதன் காரணமாக, விமான நிலையங்களை திறப்பது தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக என்று ஜி.ஏ.சந்திரசிறி மேலும் தெரிவித்தார். ஏற்கனவே 12,000 பேர் தாய் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 40,000 பேர் அழைத்து வரப்பட வேண்டும் என்று சந்திரசிறி கூறினார்.


இப்போது தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சந்திரசிறி மேலும் கூறினார்.


ALSO READ | சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ட்ராகனை ஒழித்து கட்டும் திட்டம்...!!!            


கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயால் முடங்கி போயுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை சுற்றுலா துறை அதிகாரிகளுக்கு,  இந்த முடிவு ஒரு பின்னடைவாகும்.


மே மாதத்தின் நடுவில் நாட்டில், வணிக நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என்றும்,  மேலும் ஏப்ரல் 30 முதல் தொற்றுநோய் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.


இலங்கையில் 2,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு  தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவுடன் ஒப்பிடும் போது இது மிக குறைந்த அளவாகும். மேலும், இலங்கையில், 11 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஜூன் 1 முதல் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை


சொந்த நாட்டிற்கு திரும்பி வந்த அனைவருக்கும் சுகாதார அதிகாரிகள் கொழும்பு விமான நிலையத்தில் பி.சி.ஆர் (PCR) பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் தாய் நாடு திரும்பி வந்தவுடன் குவாரண்டைன் (Quarantine) செய்யப்படுகின்றனர்.


மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்