புதுடெல்லி: ரியாத்தில் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்து கடந்த வாரம் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை மற்றும் யுஏவி தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையிலான சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹெளதி  கிளர்ச்சியாளர்கள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ballistic missile) மற்றும் வெடிகுண்டுகள் நிறைந்த ட்ரோன்களை தடுத்து நிறுத்தியதாக செளதி அரேபியா கடந்த வாரம் கூறியிருந்தது.


Also Read | பார்வை இழப்பைத் தடுக்கக்கூடிய கண் சொட்டு மருந்து தயார்


செளதி அரேபியாவில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, "செளதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து 2020 ஜூன் 23 அன்று ஏவுகணைகள் மற்றும் யுஏவி க்கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று கூறினார்.


"பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, இதுபோன்ற மோதல்கள் விரைவிலேயே தீர்க்கப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.