புதுடெல்லி: இந்தியாவில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,66,840 ஆகவும், பலி எண்ணிக்கை 16,893 ஆகவும் உயர்ந்துவிட்டது.
உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து COVID-19 பற்றிய தரவை JHU எனப்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரிக்கிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கிடைத்துள்ள தரவுகளின்படி, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,54,984. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,048 என்றும், உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 51,47,436.
உலகளவில் COVID-19 நோய்த்தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,00,000ஐ தாண்டிவிட்டது.
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,66,840 ஆகவும், பலி எண்ணிக்கை 16,893 ஆகவும் உயர்ந்துவிட்டது.
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் நோய்த்தொற்றின் தீவிரப் பரவலால் பெய்ஜிங்கிற்கு அருகேயுள்ள நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஊரடங்கை அமல்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று தாக்கம் கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் இது-
1. அமெரிக்கா - 25,88,582
2. பிரேசில் - 13,68,195
3. ரஷ்யா - 6,40,246
4. இந்தியா - 5,66,840
5. இங்கிலாந்து - 3,13,470
6. பெரு - 2,82,365
7. சிலி - 2,75,999
8. ஸ்பெயின் - 2,48,970
9.இத்தாலி - 2,40,436
10. இரான் - 2,25,205