North Korea Latest Update: ஐநா தீர்மானங்களை மீறும் வடகொரியா மீது ஜப்பான் குற்றச்சாட்டு சுமத்தும் நிலையில், வட கொரிய உளவு செயற்கைக்கோளின் சந்தேகத்திற்குரிய பகுதியை கண்டுபிடித்துள்ளதாக தென் கொரிய இராணுவம் புதன்கிழமை (மே 31) தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
Ballistic missiles Launch By North Korea: ரஷ்யாவின் 'மேம்பட்ட' ஐசிபிஎம் சோதனைகளைத் தொடர்ந்து வட கொரியா திட-எரிபொருள் ICBMஐ வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது
Ballistic missiles Launch: புதிய START ஒப்பந்தத்தில் பங்கேற்பதை இடைநிறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு ரஷ்யா 'மேம்பட்ட' ஐசிபிஎம் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்தது
Korean Peninsula Tension: வடகொரியா தொடர்பான அமெரிக்க-தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாட்டின் உடன்படிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் "கடுமையான" நடவடிக்கைகளை தொடங்கியது வடகொரியா
தென் கொரியாவின் முக்கிய அதிகாரிகளும் வட கொரியாவின் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர். ஜப்பான் கடலில் வட கொரியா ரகசிய திட்டங்களை தொடங்கியுள்ளதாக அவர்கள் கூறினார். இந்த கடல் கொரியாவில் கிழக்கு கடல் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜப்பான் மீது ஏவுகணை சோதனை செய்த வடகொரியா இன்னும் பல ஏவுகணைகள் சோதனைக்காக காத்து இருக்கின்றன என கூறி ஜப்பானை பீதியடைய செய்துள்ளது.
சமிபகாலமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணையை விண்ணில் ஏவி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக நேற்று அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஜப்பான் மீது ஏவுகணை செலுத்தி சோதனை செய்தது.
இந்த ஏவுகணை 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. இந்த ஏவுகணை ஜப்பானின் வான் பகுதியில் சென்றதால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் அபே உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனை செய்து வருகிறது. இதனால் பல்வேறு பொருளாதார தடை உத்தரவுகளை பெற்று, பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, அமெரிக்கா நேரடியாக களம் இறங்கியுள்ளது.
இந்நிலையில் வடகொரியாவின் சுனான் பகுதியில் இருந்து ஏவுகணை சோதனை ஒன்றை சமீபத்தில் நடத்தப்பட்டது.
இது 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. இந்த ஏவுகணை ஜப்பானின் வான் பகுதியில் சென்றதால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் அபே உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த ஏவுகணை இலக்கை நோக்கி தாக்கியதா என்று தென்கொரியா குறிப்பிடவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் உடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை நடத்தி வருகிறது.
வட கொரியா இன்று காலை 5.27 மணிக்கு மீண்டும் புதிய ஏவுகணை சோதனை நடத்தியது. இச்சோதனை வட மேற்கு பியாங்யாங்கில் உள்ள குசாங் பகுதியில் இருந்து நடத்தப்பட்டது
அங்கிருந்து ஏவப்பட்ட ஏவுகணை 2 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்தது. புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது பற்றி வடகொரியா எந்தவித தகவலும் வெளியிடவில்லை.
இதற்கு முன்பு 2 வாரத்துக்கு முன்பு வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. அது தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் மீண்டும் நான்கு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தது. அடுத்தடுத்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாகவும் தென் கொரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.