பாலியல் உறவு மீதான ஆர்வம் ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ வாய்ப்புள்ளது என்பதை எப்படி தீர்மானிக்கிறது என்பது தொடர்பான ஒரு ஆய்வு சுவாரசியமான முடிவுகளை தந்துள்ளது. ஜப்பானில் முதன்முறையாக நடத்தப்பட்ட ஆய்வில், செக்ஸ் மீதான ஆர்வம் ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ வாய்ப்புள்ளது என்பதை எப்படி தீர்மானிக்கிறது என்பதற்கான உத்தேசமான பதில் கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர் பாலினத்தவர்களின் மீது ஆர்வம் காட்டாத ஆண்களில் 9.6 சதவீதம் பேர் ஒன்பது ஆண்டுகளில் இறந்துவிட்டதாக ஆய்வு சுவாரஸ்யமாகக் கண்டறிந்துள்ளது. இருப்பினும், பெண்கள் மீது இன்னும் ஆர்வமாக இருப்பதாகக் கூறியவர்களில் 5.6 சதவீதம் பேர் அதே காலகட்டத்தில் இறந்துள்ளனர்.


பாலுறவில் ஈடுபடுபவர்களுடன் ஒப்பிடுகையில், நடுத்தர வயது மற்றும் பாலுறவில் ஆர்வம் இல்லாத முதியவர்கள் முன்கூட்டியே இறந்துவிடுவார்கள் என்று ஆய்வு கூறுகிறது. யமகட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் ஒன்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இது.


ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 21,000 பங்கேற்பாளர்களின் மருத்துவ வரலாறுகள் மற்றும் மன அழுத்த அளவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் கலந்துக் கொண்டவர்களின் வயது 40 மற்றும் அதற்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Coconut Cream Smoothie: இதை குடித்து நாளை துவக்கினால், ஜெட் வேகத்தில் பணியாற்றலாம்!!


டாக்டர் கௌரி சகுராடா அவர்கள் நடத்திய ஆய்வில், உடலுறவில் ஆர்வம் உள்ள ஆண்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். 8,500 க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர், அதில் 8.3 சதவீதம் பேர் எதிர் பாலினத்தில் ஆர்வம் காட்டவில்லை.


ஆயுள் தொடர்பான இந்த ஆய்வில் பங்கேற்ற சுமார் 12,400 பெண்களில் 16.1 சதவீதம் பேர் எதிர் பாலினத்தில் தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளனர். ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே மொத்தம் 356 ஆண்களும் 147 பெண்களும் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எதிர் பாலினத்தில் ஆர்வம் காட்டாத ஆண்களில் 9.6 சதவீதம் பேர் ஒன்பது ஆண்டுகளில் இறந்துவிட்டதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. இருப்பினும், பெண்கள் மீது இன்னும் ஆர்வமாக இருப்பதாகக் கூறியவர்களில் 5.6 சதவீதம் பேர் அதே காலகட்டத்தில் இறந்துள்ளனர் என்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 


"பாலியல் ஆர்வம் கொண்ட பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடும்போது, பாலியல் ஆர்வம் இல்லாதவர்களில், தற்போது புகைபிடித்தவர்கள், கடந்த காலங்களில் குடித்தவர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்படுபவர்கள், ஒப்பீட்டளவில் குறைவாக சிரித்தவர்கள் மற்றும் குறைந்த கல்வித் தகுதி பெற்றவர்கள் கணிசமாக அதிக சதவிகிதம் உள்ளனர்" என்று அமெரிக்க ஆன்லைன் அறிவியல் சஞ்சிகை Plos One வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்! கால்சியம் சூப்பர் ஃபுட்ஸ்


வயது, உடல்நலம், திருமண நிலை, சிரிப்பின் அதிர்வெண் மற்றும் மன அழுத்த அளவுகள் போன்ற காரணிகளை ஆய்வு சரிசெய்து, "பாலியல் ஆர்வம் கொண்ட ஆண்களை விட பாலியல் ஆர்வம் இல்லாத ஆண்களில் இறப்பு கணிசமாக அதிகமாக உள்ளது" என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்களின் குழு முடிவு செய்தது.


உடலுறவில் விருப்பம் இல்லாத ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், செக்ஸ் மீதான ஆர்வம் இறப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்களால் தெளிவாக கண்டறிய முடியவில்லை.


"பாலியல் உறவில் ஆர்வமின்மை, ஆரோக்கியம் இரண்டும் நீண்ட ஆயுளை எவ்வாறு பாதிக்கிறது என்பது துல்லியமாக தெரியவில்லை, இருப்பினும் பல சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கருத்தில் கொள்ளலாம்" என்று ஆய்வு கூறியது. உடலுறவில் ஆர்வம் இல்லாத ஆண்களின் புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


பெண்களைப் பொறுத்தவரை, பாலினத்தின் மீதான ஆர்வத்திற்கும் இறப்புக்கும் இடையே எந்தவிதமான தொடர்பையும் ஆய்வால் நிறுவ முடியவில்லை.


ஆண்களை மக்களுடன் பழகவும், எதிர் பாலினத்தில் ஆர்வம் காட்டவும் ஊக்குவிப்பது அவர்கள் நீண்ட காலம் வாழ உதவும் என்று ஆய்வாளர் சகுராடா அசாஹி பரிந்துரைக்கிறார்.


மேலும் படிக்க | குழந்தை பிறந்தால் லட்சக்கணக்கில் உதவித் தொகை! சலுகைகளை அள்ளி வழங்கும் தென் கொரியா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ