வெற்றியின் சின்னம் கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் இருந்து பறித்த பிரிட்டன்
East India Company vs Kohinoor diamond: கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டதை பிரிட்டன் அரசக் குடும்பம் ஒப்புக்கொண்டது
இந்தியாவில் இருந்து கோஹினூர் வைரத்தை கிழக்கிந்திய கம்பெனி எடுத்துச் சென்றதை பிரிட்டன் அரச குடும்பம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. மகாராஜா திலீப் சிங் அதை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்தியாவின் சுரங்கத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெட்டியெடுக்கப்பட்ட கோஹினூர் வைரம் 105 கேரட் கொண்டது.
200 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த அபூர்வ வைரம் 14 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கோஹினூர் வைரம் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகவும் விலை உயர்ந்ததாகும்.
இந்த வைரம் கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கோஹினூர் வைரம், இந்தியாவில், இந்து கோவிலில் தெய்வத்தின் ஒரு கண்ணாக பயன்படுத்தப்பட்டது.
அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக் கஃபூர் கோஹினூர் வைரத்தைக் கொள்ளையடித்தார். அதன்பின் முகலாயப் பேரரசின் பல மன்னர்களிடம் இருந்த கோஹினூர் வைரம், லாகூரில் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது.
மேலும் படிக்க | 20 நிமிடங்களுக்குள் மூன்று ரயில்கள் மோதி விபத்து! பயணிகளின் நிலை என்ன? கள நிலவரம்
மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் திலீப் சிங் ஆட்சியின் போது 1849ல் விக்டோரியா மகாராணிக்கு வைரம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த வைரம், பிரிட்டனின் லண்டன் டவரில் அரச நகைகளின் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
லாகூர் ஒப்பந்தத்தின் கீழ், கோஹினூரை ஒப்படைக்க திலீப் சிங்கிடம் நிபந்தனை விதிக்கப்பட்டது என்று, லண்டன் டவரில் அரச நகைகளின் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனையின் ராயல் சேகரிப்பு அறக்கட்டளையின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த உரை கண்காட்சியில் எழுதப்பட்டுள்ளது. உண்மையில், முதன்முறையாக, கோஹினூர் உள்ளிட்ட பல விலையுயர்ந்த வைரங்கள் மற்றும் நகைகள் லண்டன் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இங்கு கோஹினூரின் வரலாறும் பல காணொளிகள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலம் சொல்லப்படுகிறது. வெற்றியின் அடையாளமாக கோஹினூர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி தப்பித்தவரின் நேரடி வாக்குமூலம்... சம்பவ இடத்தில் நடந்தது என்ன?
கோஹினூர் வைரம் 'வெற்றியின் சின்னம்'
கிரவுன் ஜூவல்ஸ் கண்காட்சியில் கோஹினூர் பற்றிய படமும் காட்டப்பட்டுள்ளது. இதில், அதன் முழு வரலாறும் கிராஃபிக் வரைபடத்தின் மூலம் காட்டப்பட்டுள்ளது. இந்த வைரம் கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, மகாராஜா திலீப் சிங் அதை கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைப்பதை ஒரு படத்தில் காணலாம்.
மற்றொரு படத்தில், பிரிட்டனின் ராணியின் கிரீடத்தில் கோஹினூர் காணப்படுகிறது. சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி லண்டன் டவரில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜா சார்லஸ் மற்றும் ராணி கமிலாவுக்கு மே 6 அன்று முடிசூட்டப்பட்டது.
ராணி கமிலா கோஹினூர் பதிக்கப்பட்ட கிரீடத்தை அணியவில்லை
முடிசூட்டு விழாவில் கமிலா ராணி எலிசபெத்தின் கோஹினூர் பதிக்கப்பட்ட கிரீடத்தை அணியவில்லை. அதற்கு பதிலாக, ராணி மேரியின் கிரீடம் அவருக்காக புதிதாக புதுப்பிக்கப்பட்டது. பல விலையுயர்ந்த வைரங்களும் முத்துகளும் அதில் பொதிக்கப்பட்டன.
மேலும் படிக்க | செவ்வாய் தோஷம் படுத்தும் பாடு! தானாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்
உண்மையில், கோஹினூர் பதித்த கிரீடத்தைப் பயன்படுத்துவது இந்தியாவுடனான உறவைக் கெடுத்துவிடும் என்று அரச குடும்பம் அஞ்சியது. இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோஹினூர் வைரத்தை திரும்பக் கேட்கும் இந்தியா
கோஹினூர் பதிக்கப்பட்ட கிரீடம் முதலில் பிரிட்டனின் ராணி எலிசபெத்தின் அம்மா அணிந்திருந்தார். அதன்பிறகு, ராணி எலிசபெத்துக்கு கிரீடத்தை அணிந்திருந்தார். பிரிட்டன் ராணியின் கிரீடத்தின். கோஹினூர் தவிர, பல விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆப்பிரிக்காவின் மிக மதிப்புமிக்க வைரமான Great Star of Africaவும் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் $400 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோஹினூர் வைரத்தின் மீதான சட்டப்பூர்வ உரிமையை இந்தியா பிரிட்டன் முன் பலமுறை கோரியுள்ளது.
மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது? ரயில்வே தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ