செவ்வாய் தோஷம் படுத்தும் பாடு! தானாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

Bail Plea vs Astrology:  "வழக்குத் தொடர்ந்த பெண் அதிர்ஷ்டம் உள்ளவாரா? செவ்வாய் தோஷம் இருக்கிறதா” கணித்து கூறுமாறு ஜோதிட துறைக்கு உத்தரவிட்ட அலகாபாத் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 3, 2023, 04:51 PM IST
  • "வழக்குத் தொடர்ந்த பெண் அதிர்ஷ்டம் உள்ளவாரா? செவ்வாய் தோஷம் இருக்கிறதா?”
  • ஜாதகத்தை கணித்து கூறுமாறு ஜோதிட துறைக்கு உத்தரவிட்ட அலகாபாத் நீதிமன்றம்
  • உத்தரவை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்
செவ்வாய் தோஷம் படுத்தும் பாடு! தானாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் title=

Supreme Court stayed order of Allahabad H: ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் ஜாமின் கோரி தொடர்ந்த மனு மீதான விசாரணையை நடத்திய அலகாபாத் உயர்நீதிமன்றம், அந்த பெண் "அதிர்ஷ்டம் உள்ளவாரா என்பதை கணித்து கூறுமாறு ஜோதிட துறைக்கு உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

வழக்குத் தொடுத்த பெண், அதிர்ஷ்டம் இல்லாதவர் என கூறிய ஜாமீன் கோரிய காதலர், திருமணம் செய்ய மறுத்துள்ளார். திருமணம் செய்வதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபர் அப்பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு காரணம் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்றும், துரதிருஷ்டம் கொண்டவர் என்று குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

 இதையடுத்து ஜோதிடம் கணிக்க உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தை அறிந்த  உச்சநீதிமன்றம், தானாக முன்வந்து வழக்கை விசாரித்து, ஜாதகத்தை கணித்து கூற  அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தது.

மேலும் படிக்க | வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானதே: பி.டி.ஆர்

திருமணம் செய்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு திருமணம் செய்ய மறுத்ததாக பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தன்னுடன் நெருக்கமாக இருந்த தனது காதலர், பிறகு திருமணம் செய்ய மறுத்து வருவதாக, சம்பந்தப்பட்ட பெண், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். பலாத்கார வழக்கில், ஜாமீன் கோரிய குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பு என்ன காரணம் சொன்னது என்பதுதான் வழக்கில் பரபரப்புக்கான காரணம்.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பு சொல்வது ஒருபுறம் என்றால், அதை ஏற்ற நீதிமன்றத்தின் உத்தரவும் சர்ச்சைஅக்ளை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்குரைஞர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற லக்னோ அமர்வு பரிசீலித்து வந்தது.
 
திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை விசாரித்த,  அலகாபாத் உயர்நீதிமன்றம், லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறை, சம்பந்தப்பட்ட பெண்ணின் ஜாதகத்தை ஆய்வு செய்யுமாறு சமீபத்தில் உத்தரவிட்டது.   

மேலும் படிக்க | ஏய் இது பாம்பு டான்ஸ்ப்பா! பாங்கரா இல்லை! கன்ஃப்யூஸ் ஆன சீக்கிய டான்சர்கள்

கோபிந்த் ராய் என்பவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் பரிசீலித்து வந்தது. குற்றம்சாட்டபப்ட்டவரின் தரப்பு சொல்வது போல, தனது கட்சிக்காரர் செவ்வாய் தோஷம் உள்ளவர் அலல் என்று பெண்ணின் வழக்கறிஞர் வாதிட்டதால், தனி நீதிபதி பிரிஜ் ராஜ் சிங், வழக்கு தாக்கல் செய்த பெண்ணும், ஜாமீன் கோரிய விண்ணப்பதாரரும் தங்கள் ஜாதகங்களை லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறையில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

ஜாதகங்களை பரிசீலித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீலிடப்பட்ட கவரில் அந்த அறிக்கை இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

"பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாக, ஜாமீன் கோரிய விண்ணப்பதாரரின் கற்றறிந்த வழக்கறிஞர் வாதிட்டார், அதற்கு, பெண் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்பதைப் பார்க்க. லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறைத்தலைவர் ஜாதகங்களை ஆராய்ந்து, மூன்று வாரங்களுக்குள் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு ஜூன் 26-ம் தேதி பரிசீலிக்கப்படும்

விண்ணப்பதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ரவீந்திர குமார் சிங், அஞ்சலி துபே, மனோஜ் கி.ஆர். சிங், ராஜீவ் மிஸ்ரா, சோனியா மிஸ்ரா மற்றும் சோனி பதக் ஆஜரானார்கள். அரசு தரப்பில், வழக்கறிஞர் விவேக் குமார் சிங் ஆஜரானார்.

மேலும் படிக்க | கோடிக்கணக்கில் உயிரிழப்பு... இருந்தாலும் கோடியில் புரளும் சிகரெட் கம்பெனிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News