லண்டன்: கோனோரியாவைத் தவிர்க்க ஆணுறையைப் பயன்படுத்துங்கள் என்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மற்றும் விடுப்புக்கு பிறகு கல்வி நிலையங்களுக்கு திரும்பும் மாணவர்களுக்கு ஆணுறை பயன்பாடு மற்றும் STI களுக்கான வழக்கமான சோதனைகள் தொடர்பாக அரசு சுகாதார அதிகாரிகள் ஊக்குவிக்கின்றனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேகவெட்டை எனப்படும் கோனோரியா நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பல்கலைக்கழக மாணவர்கள் உடலுறவு கொள்ளும்போது ஆணுறை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.


மேகவெட்டை நோய் என்பது நெய்சீரியா கோனோரியா என்னும் பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்றுநோய் ஆகும். இந்தத்  தொற்று இருப்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் மேகவேட்டை நோய் பரவுகிறது. இந்த மேகவெட்டை நோய் உள்ள நபர்களுக்கு எந்த வித அறிகுறிகளும் தெரிவதில்லை என்பதும், அறிகுறிகள் தெரிந்தாலும் அது பெரிய அளவில் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வு என்பது இந்த மேகவெட்டை நோயின் பொதுவான அறிகுறியாகும். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றின் கண்டறிதல்கள் அதிகரித்துள்ளன, மேலும் 15 முதல் 24 வயதுடையவர்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற பெண்! சிறிது நேரத்தில் தானும் உயிரிழந்த சோகம்!


மேகவெட்டை நோய் ஏற்பட்டால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுத்து சிகிச்சையளிக்கப்படலாம், ஆனால் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பல சிக்கல்களையும் இந்த நோய் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய துணையுடன் உடலுறவு கொள்வதற்கு முன் மாணவர்கள் இலவச பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


பலருக்கு இந்த நோய்த் தொற்றினால் அறிகுறிகள் ஏற்படுவதில்லை என்பதனால், உடலுறவின் போது தங்களை அறியாமலேயே நோய்த்தொற்றுகளைப் பெறுகிறார்கள். "STI களுக்கு எதிராக ஆணுறைகள் சிறந்த பாதுகாப்பு என்று பிரிட்டன் ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் (UKHSA) பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் தலைவர் டாக்டர் கேட்டி சின்கா கூறுகிறார்.


பிரிட்டணில், மேகவெட்டை எனப்படும் கோனோரியா வழக்குகள் கடந்த ஆண்டு மட்டும் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, அதிலும் குறிப்பாக 19 மற்றும் 20 வயதுடையவர்கள் மத்தியில் இந்த நோய் மிகவும அதிகரித்துள்ளது. கோனோரியா மற்றும் சிபிலிஸ் இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது.


மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் பொய் கூறினால் என்ன செய்யலாம்..?


நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மேகவெட்டை நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் எதிர்காலத்தில் பலனளிக்காமல் போய்விடலாம் என்றும் சுகாதார நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.


கோனோரியா எனப்படும் மேகவெட்டை நோய் பாதித்த அறிகுறிகள் பொதுவாக தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் தோன்றும், ஆனால் மிகவும் பாதித்த பிறகு தோன்றும் அபாயங்களும் உண்டு. ஏனென்றால், பாதிக்கப்பட்ட ஆண்களில் 10% மற்றும் பெண்களில் பாதி பேருக்கு எந்த அறிகுறிகயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆணுறையின் அவசியம்


இதுபோன்ற நோய்த்தொற்றுகளை தவிர்க்க ஆணுறைகளை அணிவதும், பரிசோதனை செய்து கொள்வதும் மிகவும் முக்கியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. சில பகுதிகளில் சோதனைகள் இலவசமாகக் கூட கிடைக்கின்றன.


"உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ ஆணுறை அணிவது பிடிக்கவில்லை என்றால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். வெவ்வேறு வடிவங்கள், அளவுகள், அமைப்புமுறைகள், வண்ணங்கள் மற்றும் சுவைகளில் ஆணுறைகள் கிடைக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவை உடலுறவை மிகவும் வேடிக்கையாக மாற்றும்" என்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.


அதற்காக,  பல பாலியல் சுகாதார கிளினிக்குகள் இப்போது இலவச STI சுய பரிசோதனை கருவிகளையும் வழங்குகின்றன. Sexwise இணையதளத்தில் இலவச சோதனைக் கருவியை எங்கு பெறுவது என்பது பற்றிய தகவல்கள் உள்ளன. மேகவெட்டையைத் தவிர மற்ற வகை STIகளில் கிளமிடியா, பிறப்புறுப்பு மருக்கள், பிறப்புறுப்பு ஹெர்பெஸ் மற்றும் ட்ரைகோமோனியாசிஸ் ஆகியவை அடங்கும்.


மேலும் படிக்க | தென் கொரியாவின் இருண்ட கடந்த காலம்! 'குழந்தை ஏற்றுமதியாளர்' நாட்டின் சோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ