சீனாவில் இலங்கை தேசிய கொடி வடிவமைப்பில் மிதியடி; கடுப்பில் உள்ள இலங்கை
சீனா நிறுவனமான `ஷெங்ஹாங் லின்` தயாரித்த கொடி வடிவமைப்பிலான மிதியடி அமேசானில் $ 12 க்கு விற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட இலங்கை கொடி வடிவமைப்பில் ஆன மிதியடி தொடர்பாக கொழும்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, இலங்கையில் உள்ள சீன தூதரகத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளது இலங்கை. சீனா நிறுவனமான "ஷெங்ஹாங் லின்" தயாரித்த கொடி வடிவமைப்பிலான மிதியடி அமேசானில் $ 12 க்கு விற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. பாலியெஸ்டரில் தயாரிக்கப்பட்ட இலங்கை கொடி வடிவமைப்பில் ஆம மிதியடி $ 12 மற்றும் $9.20 லெலிவரிக்கான கட்டணத்தில் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டது.
இலங்கை (Srilanka) வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு, சீனாவில் இதை உற்பத்தி செய்த நிறுவனத்திடம் இந்த விவகாரத்தை எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் கொழும்பில் உள்ள சீன (China) தூதரகத்திலும் எழுப்பப்பட்டுள்ளது. பெய்ஜிங் மட்டுமல்ல, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகமும் அமேசான் என்ற விளம்பர தளத்துடன் "இந்த விவகாரத்தை எழுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ALSO READ | கடல் பரப்பில் 'வானத்தில் மிதக்கும்' கப்பல்.. வைரலாகும் புகைப்படம்..!!
இதற்கிடையில், இலங்கையை சமாதானப்படுத்தும் முயற்சியாக, இலங்கையில் உள்ள சீன தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, "இலங்கை தேசியக் கொடி வடிவமைப்பிலான விளம்பரம் குறித்த விவகாரத்தை தூதரகம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக" கூறியுள்ளது.
அந்த அறிக்கையில், அமேசான் (Amazon), சீன நிறுவனத்தின் தொடர்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என அது சுட்டிக்காட்டியது, தூதரகம் "பல்வேறு நாடுகளின் கொடிகளுடன் கூடிய ஆயிரக்கணக்கான ஒத்த தயாரிப்புகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விற்பனையாளர்களால் தயாரிக்கப்படுகின்றன, இந்த உலகளாவிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரில் கிடைக்கின்றன" என சீனா குறிப்பிட்டுள்ளது
"அனைத்து சூழ்நிலைகளிலும் நண்பராகவும், நெருங்கிய நட்பு நாடாகவும், உள்ள இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் கவுரவத்தை மனதி கொண்டு பல தசாப்தங்களாக சீனா ஆதரவளித்து வருகிறது" எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது
சீனா சர்ச்சையில் சிக்குவது இது முதல் தடவையல்ல. சீனா நாடுகளுக்கு கடன் கொடுத்து அடிமைபடுத்தும் இராஜதந்திரமத்தை கடை பிடிக்கும் நாடு, ஹம்பன்டோட்டா துறைமுகத்தின் குத்தகைக்கு எடுக்கும் போது, சீனாவின் ஆதிக்க மனப்பான்மை குறித்து பெரிதும் பேசப்பட்டது.
ALSO READ | QUAD Summit 2021: அமெரிக்க கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR