7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? சமீபத்திய அப்டேட் இதோ
7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிட உள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக விரைவில் பெரும் பரிசு வழங்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிட உள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், இது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அகவிலைப்படி மாறும்
இதற்கு முன்னர் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் 2022 இல் அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டது. இந்த முறை இதுவரை எந்த புதுப்பிப்பும் இல்லை. அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசால் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஜனவரி மாதத்திற்கான டிஏ மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஜூலை மாதத்திற்கான டிஏ குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
சில்லறை பணவீக்கம் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது
மார்ச் மாதத்தில், அரசாங்கம் அகவிலைபப்டியை 3% அதிகரித்து 34% ஆக உயர்த்தியது. தற்போது மீண்டும் விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட உள்ளது. ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது. இதன்படி, டிஏ 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில், பணவீக்க விகிதம் 7.01 சதவீதமாக இருந்தது. அந்த நேரத்தில் டிஏ 5 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அகவிலைப்படி உயர்வு ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு 129.2 புள்ளிகளாக இருந்தது. டிஏ-வில் 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கே காணலாம்.
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 21,622-19,346 = ரூ 2,276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2,276X12 = ரூ 27,312
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6840-6120 = ரூ.720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720 X12 = ரூ 8,640
மேலும் படிக்க | 8th Pay Commission: அடுத்த ஊதியக்கமிஷன் வருமா, வராதா? முக்கிய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ