7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 2.59 லட்சம் வரை கிடைக்கும் வாய்ப்பு!

அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது, அதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது.  

Written by - RK Spark | Last Updated : Aug 15, 2022, 11:26 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அரசாங்கம் 4% உயர்த்தி இருக்கிறது.
  • அகவிலைப்படி அதிகரிப்பு ஏஐசிபிஐ-ன் டேட்டாக்களை பொறுத்தது.
  • இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 2.59 லட்சம் வரை கிடைக்கும் வாய்ப்பு! title=

மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட காலமாக ஆசையோடு எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் தற்போது நடந்துவிட்டது.  ரக்ஷா பந்தனுக்கு முன்னதாகவே மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அரசாங்கம் 4% உயர்த்தி இருக்கிறது.  ஜூன் மாதத்திற்கு பிறகு அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் தொழில்துறை தொழிலாளர்களின் (ஏஐசிபிஐ) டேட்டாக்களை வெளிவந்த பிறகு, அகவிலைப்படியில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என்பது தற்போது உறுதியாகிவிட்டது.  இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திகளின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டுள்ளது இதனை அரசு அறிவித்துள்ளது.  இந்த அகவிலைப்படி அதிகரிப்பு ஏஐசிபிஐ-ன் டேட்டாக்களை பொறுத்தது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

பே-கிரேடு லெவல் 3-ன் அதிகபட்ச அளவுகோலில் ரூ.56,900 அடிப்படை சம்பளத்தில் மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ.259,464 ஆக இருக்கும்.  ஆனால், தற்போதைய அகவிலைப்படியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கருத்திற்கொண்டு பார்க்கையில் வருடாந்திர ஊதிய உயர்வு ரூ.27,312 ஆக இருக்கும். 
அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது, அதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகவிலைப்படியானது செப்டம்பர், 2022 சம்பளத்தில் வழங்கப்படும்.

மேலும் படிக்க | விவசாயிகளே! ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இதை அப்டேட் செய்யுங்கள்

அதே சமயம் இந்த  அகவிலைப்படி உயர்வு ஜூலை முதல் அமலுக்கு வந்துள்ளது, அதன்படி ஜூலை மற்றும்  ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களின் கணக்கில் வந்து சேரும்.  ஆக மொத்தத்தில் ஊழியர்களின் கணக்கில், டிஏ பாக்கியுடன் பெரிய தொகை வந்து சேரும்.

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு :

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) ரூ 21,622/மாதம்
3. முன்னர் இருந்த அகவிலைப்படி (34%) ரூ 19,346/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி 21,622-19,346 அதிகரித்துள்ளது = ரூ.2260 /மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 2260 X12 = ரூ 27,120

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ18,000 
2. புதிய அகவிலைப்படி (38%) ரூ  6840/மாதம்
3. முன்னர் இருந்த அகவிலைப்படி (34%) ரூ 6120/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி 6840-6120 அதிகரித்துள்ளது = ரூ.1080 /மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 720 X12 = ரூ 8640.

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News