FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் IDFC வங்கி!

மூத்த குடிமக்களின் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 4% முதல் 6.50% வட்டி விகிதத்தை ஐடிஎஃப்சி வங்கி வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 2, 2022, 05:19 PM IST
  • அதிகரித்துள்ள வட்டி விகிதமானது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
  • 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.50% வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • 5-10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வங்கியானது 6% வட்டியை வழங்குகிறது,
FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் IDFC வங்கி! title=

தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியானது ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.  1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வங்கி அதிகரித்துள்ள வட்டி விகிதமானது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.  7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 3.50 % முதல் 6.00% வரை வட்டி விகித உயர்வும், 3 ஆண்டுகள், 1 நாள் அல்லது 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்  ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.50% வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: பம்பர் டிஏ உயர்வு, ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும்

மேலும் வங்கியானது 7 முதல் 29 நாட்களுக்கு இடைப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 3.50% வட்டியும், 30 முதல் 90 நாட்களுக்கு இடைப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 4% வட்டியும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.  அதனைத்தொடர்ந்து, 91 முதல் 180 நாட்களுக்கு முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.50% வட்டியும், 181 நாட்கள் முதல் வருடத்திற்கு உள்ள டெபாசிட்டுக்கு 5.75% வட்டியும் வழங்குகிறது.  1 வருடம் 1 நாள் - 3 ஆண்டுகளில் முதிர்ச்சிடையும் டெபாசிட்டுகளுக்கு 6.25% வட்டியையும் வழங்கும், இது முன்னர் 6.00% ஆக இருந்து.  3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவான முதிர்ச்சியடைந்த டெபாசிட்டுகளுக்கு 6.25%க்கு பதிலாக 6.50% வட்டியும், 25 அடிப்படை புள்ளிகளையும் வழங்குகிறது.  

5-10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வங்கியானது 6% வட்டியை வழங்குகிறது, வரி சேமிப்பாளர் டெபாசிட்டுகளுக்கு 6.50% வட்டியை வழங்குகிறது.  மேலும் ஐடிஎப்சி வங்கியானது மூத்த குடிமக்களின் நலனுக்காக சிலவற்றை செய்துள்ளது.  இதுகுறித்து அதன் இனைய பக்கத்தில், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் தொகையானது மற்றவர்களை காட்டிலும் 0.50% கூடுதலாக தான் இருக்கும்.  மேலும் என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ போன்ற  ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு கிடைக்காது.  மூத்த குடிமக்களின் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 4% முதல் 6.50% வட்டியும், 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு அவர்களுக்கு அதிகபட்சமாக 7% வட்டி விகிதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மில்லியனர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News