Budget 2025: பட்ஜெட்டில் EPFO அதிரடி அறிவிப்பு... ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

Private Sector Employees: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) ஓய்வூதியம் பெறுவதற்கான அடிப்படை சம்பள வரம்பை அதிகரிக்கும் திட்டத்தின் பணிகளில் EPFO ​​மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 25, 2025, 03:50 PM IST
  • ஊதிய உச்சவரம்பை 15,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்த யோசனை.
  • பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா?
  • ஊழியர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?
Budget 2025: பட்ஜெட்டில் EPFO அதிரடி அறிவிப்பு... ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

Private Sector Employees: தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இது உங்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்கும் வகையில் இருக்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போதைய அடிப்படை சம்பளத்தை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும்  இபிஎஃப் பங்களிப்பின் அளவு அதிகரிக்கும். இதன் மூலம் பணி ஓய்வுக்குப் பிறகான நிதி பாதுகாப்பு அதிகரிக்கும்.

Add Zee News as a Preferred Source

Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பை 15,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்த யோசனை

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) ஓய்வூதியம் பெறுவதற்கான அடிப்படை சம்பள வரம்பை அதிகரிக்கும் திட்டத்தின் பணிகளில் EPFO ​​மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த முன்மொழிவின் கீழ், ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களின் அடிப்படை சம்பள வரம்பை 15,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்த ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், தனியார் ஊழியர்களுக்கு இதன் நேரடி பலன் கிடைக்கும்.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இபிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்

இந்த சம்பள வரம்பு அதிகரிக்கப்படுவதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அதிகமான ஊழியர்கள் இபிஎஃப் திட்டத்தின் கீழ் வருவார்கள். இது ஓய்வூதிய நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதியில் பெரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதன் மூலம் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு நிதி ஸ்திரத்தன்மை கிடைக்கும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படி உயர்வுடன் இதுவும் உண்டு

Budget 2025: பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா?

நிதி அமைச்சகம் மற்றும் தொழிலாளர் அமைச்சகம் இந்த முன்மொழிவை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடைமுறைக்கு வரும் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நல்ல செய்தியை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ESIC

பிஎஃப் வரம்பை 21000 ரூபாயாக உயர்த்தும் திட்டம் உள்ளது.  ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) வரம்பு 2017 முதலே ரூ.21,000 ஆக உள்ளது. இரண்டு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வரம்புகளையும் ஒரே மாதிரியாக மாற்ற அரசு விரும்புகிறது. EPFO மற்றும் ESIC இரண்டும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

- ஓய்வூதியத்திற்கான அடிப்படை சம்பள அளவு ரூ.6,000 வரை உயரும்.
- EPF மற்றும் ஓய்வூதிய நிதிக்கு அதிக பங்களிப்பு கிடைக்கும்.
- ஓய்வுக்குப் பிறகு அதிகரித்த நிதி பாதுகாப்பு.

ஓய்வூதியத்திற்கான அடிப்படி சம்பள வரம்பு அதிகரிகப்பட்டால், அது தனியார் ஊழியர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். எனினும், தன் காரணமாக ஊழியர்களின் கையில் கிடைக்கும் மாத சம்பளம், அதாவது டேக் ஹோம் சேலரியின் அளவு சற்று குறையும். கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு குறைவது குறுகிய கால தாக்கமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் நீண்ட கால பலன்கள் ஊழியர்களின் பணி ஓய்வு காலத்தில் தெரியும். எதிர்காலத்தில் நிதிப் பாதுகாப்பிற்காக போராடும் ஊழியர்களுக்கு இந்த மாற்றம் குறிப்பாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: ஓய்வு பெறும் போது கையில் ரூ.6 கோடி... மாதம் ரூ.6000 முதலீடு போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News