உங்கள் அலுவலகத்தில் பான்-ஆதார் சமர்ப்பிக்கவும், தவறும்பட்சத்தில் 20% வரி செலுத்த வேண்டும்
நீங்கள் பான்-ஆதார் விவரங்களை மறைக்கிறீர்கள் அல்லது கொடுக்கவில்லை என்றால், நீங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
புது டெல்லி: நீங்கள் பான்-ஆதார் (Pan-Aadhaar) விவரங்களை மறைக்கிறீர்கள் அல்லது கொடுக்கவில்லை என்றால், நீங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இதுக்குறித்து நீங்கள் தகவல்களை வழங்கவில்லை என்றால், இப்போது நீங்கள் 20% வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் படிக்க: ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகள் மார்ச் 31க்கு பிறகு செயல்படாது
உண்மையில், மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி - CBDT) விதிப்படி, ஒரு டி.டி.எஸ் (TDS) விலக்குக்காக, இந்த இரண்டு ஆவணங்களின் விவரங்களையும் வேலை செய்பவர் தனது நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு ஊழியரும் தனது முதலாளிக்கு பான் (PAN Card) அல்லது ஆதார் எண்ணைக் (Aadhaar number) கொடுக்கவில்லை என்றால், அவர் தனது வருமானத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க: ரத்து செய்யப்பட்ட PAN CARD பயன்படுத்தினால் ரூ .10000 செலுத்த தயாராக இருங்கள்
பான்-ஆதார் எங்கே முக்கியமானது?
இந்த விதி சிபிடிடியின் (CBDT) சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின் படி, வருமான வரிச் (Income tax Act) சட்டத்தின் 206 ஏஏ பிரிவில், ஊழியர் பெறும் வரிவிதிப்புத் தொகை குறித்து பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்க வேண்டியது கட்டாயமாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால், உங்கள் வருமானத்தில் இருந்து வரியை நிறுவனம் கழிக்க முடியும். ஒட்டுமொத்தமாக, வருமானத்தில் 20% வரியைக் கழிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: உங்களிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளதா? எச்சரிக்கையாக இருங்கள்!!
தவறான விவரங்களை வழங்கினால் அபராதம் விதிக்கப்படும்:
வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை குறித்த விவரங்கள் மற்றும் பான்-ஆதார் விவரங்கள் முற்றிலும் சரியானவையாக இருக்க வேண்டும். சட்டத்தின் படி, உங்கள் நிறுவனத்திடம் விவரங்கள் சரியாக இல்லாவிட்டால் டி.டி.எஸ்ஸை (TDS) மிக அதிக விகிதத்தில் கட்ட வேண்டி இருக்கும். ஒருவேளை நீங்கள் தவறான விவரங்களை அளித்தால், எந்த விகிதத்திலும் TDS ஐக் கழிக்க முடியும். ஊழியரின் வருமானத்தில் 20% வரி பிடித்தம் செய்யப்படும் அல்லது அதைவிட அதிக விகிதத்தில் டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படும்.
மேலும் படிக்க: ஆதார் முகவரி பொருந்தவில்லையா? புதிய முகவரியை வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்!