ரத்து செய்யப்பட்ட PAN CARD பயன்படுத்தினால் ரூ .10000 செலுத்த தயாராக இருங்கள்

பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் 2 விதமான சிக்கல்களை எதிர்கொள்வது உறுதி. முதலில் பான் அட்டை செயல்பாடு முடக்கப்படும் இரண்டாவதாக, அந்த பான் அட்டையை பயன்படுத்தினால் ரூ .10,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 28, 2020, 09:18 PM IST
ரத்து செய்யப்பட்ட PAN CARD பயன்படுத்தினால் ரூ .10000 செலுத்த தயாராக இருங்கள் title=

புது டெல்லி: பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் இரண்டு விதமான சிக்கல்களை எதிர்கொள்வது உறுதி. முதலில், அவர்களின் பான் அட்டை செயல்பாடு முடக்கப்படும் (ரத்து செய்யப்படும்). இரண்டாவதாக, ரத்து செய்யப்பட்ட பான் அட்டையை பயன்படுத்தினால் ரூ .10,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். பான்-ஆதார் இணைக்க கடைசி தேதி 31 மார்ச் 2020 ஆகும். இந்த தேதிக்குள் இணைக்கப்படா விட்டால் பான் அட்டை ரத்து செய்யப்படும். இந்த முறை தேதி நீட்டிக்கப்படாது என்று மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இருப்பினும், அதில் ஒரு நிபந்தனை மற்றும் விதிமுறைகள் அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

நிபந்தனை மற்றும் விதி:
31 மார்ச் 2020 க்குள் ஆதார் உடன் பான் இணைக்கப்படாவிட்டால், அது ரத்து செய்யப்படும். வருமான வரி வருவாயைப் பயன்படுத்த பான்-ஆதார் இணைப்பு அவசியம். ஆனால், எந்தவொரு வரி செலுத்துவோரும் காலக்கெடுவுக்குள் பான்-ஆதார் இணைப்பை செய்யவில்லை என்றால் அவர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், மார்ச் 31 க்குப் பிறகும் இதை இணைக்க முடியும். இருப்பினும், வரித்துறை நிர்வாகம் இதற்கு ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. பான்-ஆதார் இணைப்பு உருவாகும் வரை பான் அட்டை ரத்து செய்யப்படும் என்பது தான் அந்த நிபந்தனை. ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்போது பான் அட்டை மீண்டும் செயல்பாட்டு வந்துவிடும்.

ரத்து செய்யப்பட்ட பான் அட்டை பயன்படுத்தினால்...
பான் அட்டை ரத்து செய்யப்பட்ட பிறகு, அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். ஆனால், இதற்கிடையில் யாராவது ரத்து செய்யப்பட்ட பான் கார்டைப் பயன்படுத்தினால், அது வருமான வரிச் சட்டத்தின் கீழ் பிரிவு 272 பி விதிமீறலாகக் கருதப்படும். இதனால் அவர்கள் ரூ .10,000 அபராதம் செலுத்த வேண்டும். அதன்பிறகும் ரத்து செய்யப்பட்ட பான் அட்டை மீண்டும் பயன்படுத்தப்பட்டால், அபராதமும் அதிகரிக்கப்படலாம்.

ரத்து செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:
மார்ச் 31 க்குப் பிறகு, நீங்கள் பான்-ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், அது ரத்துசெய்யப்படும். அதன் பொருள் அது செயலற்ற பிரிவில் வைக்கப்படும். இணைத்த பின்னரே பான் கார்டு செயல்படும். எளிதான மொழியில் சொல்லவேண்டும் என்றால், மார்ச் 31 க்குப் பிறகு பான்-ஆதார் இணைக்கப்படாவிட்டால், ஆதார் உடன் இணைக்கப்படும் வரை பான் அட்டை ரத்து செய்யப்படும்.

சிபிடிடி விதிகளை மாற்றியது:
சிபிடிடி சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில், வருமான வரிச் சட்டம் 1962 இல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரிச் சட்டம் 1962 இன் விதி 114AA இல் துணைப்பிரிவு 114AAA சேர்க்கப்பட்டுள்ளது. புதிய விதியில், எந்தவொரு வரி செலுத்துவோரும் மார்ச் 31, 2020 க்குள் தங்கள் பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்களுக்கு இந்த புதிய விதி அவர்களுக்கு பொருந்தும்.

income tax act

Trending News