புதுடெல்லி: உங்களிடம் உள்ள 50 மற்றும் 200 ரூபாய் நோட்டு கள்ளத்தனமாக இருக்கலாம். கள்ள நோட்டுகள் (Fake Note)சந்தையில் புழக்கத்தில் அதிகம் காணப்படுகின்றன. இதனால், கள்ள நோட்டுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி (RBI) தகவல்களை வழங்கியுள்ளது
கள்ள நோட்டுகளை அறிந்து கொள்வது எப்படி?
நம்மிடம் உள்ள ரூபாய் நோட்டுகள் போலியானதா அல்லது உண்மையானது என்பதைக் கண்டறிவது எப்படி என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். இதனால்தான் கள்ள நோட்டுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) செயல்படுகிறது. நிதி விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வகையில், பிராந்திய இயக்குனர் லட்சுமிகாந்த் ராவ் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். பத்து, இருபது, ஐம்பது மற்றும் இருநூறு ரூபாய் கள்ள நோட்டுகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.
50 ரூபாய் நோட்டை எவ்வாறு அடையாளம் காண்பது? :
- 50 தேவநகரில் எழுதப்பட்டிருகக்கும்
- மத்தியில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இருக்கும்
- உலோகம் அல்லாத பாதுகாப்பு கோடு இருக்கும்
- வலதுபுறத்தில் அசோக தூண் சின்னம்இருக்கும்
- எலக்ட்ரோடைப்பில் 50 என்ற வாட்டர் மார்க் இருக்கும்
- நோட்டின் எண் குழு இடது புறம் மேல் மற்றும் வலதுபுறத்தில் கீழேயும் சிறிய அளவில் எழுதப்பட்டிருக்கும்
- பின்புறத்தில் 50 ரூபாய் எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற தகவல் இருக்கும்
.- தூய்மை இந்தியா (Swatch Bharath) சின்னம் இருக்கும்
.-ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டுள்ள அளவு 66 * 135 மிமீ இருக்கும்
ALSO READ | Fake Currency: போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு, அடையாளம் காண்பது எப்படி? - RBI
200 ரூபாய் நோட்டில் உள்ள அம்சங்கள்
- 200 தேவநகரில் எழுதப்பட்டிருகக்கும்
- மத்தியில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இருக்கும், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் 200 என எழுதப்பட்டிருக்கும்
- வண்ணம் மாறும் உலோகம் அல்லாத பாதுகாப்பு கோடு இருக்கும்
- ரூபாய் நோட்டை அசைத்து பார்க்கும்போது பாதுகாப்பு நூலின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறத்தில் மாறுபடும்
- ஆளுநரின் கையொப்பம் இருக்கும்
- ரிசர்வ் வங்கி லோகோ, மகாத்மா காந்தி உருவப்படம் மற்றும் எலக்ட்ரோடைப் 200 வாட்டர்மார்க் ஆகியவற்றைக் காணலாம்
-வலதுபுறத்தில் அசோக தூண் சின்னம்
வங்கி சேவைகள் தொடர்பான புகார்கள் இருந்தால், பொதுமக்கள் தங்கள் குறைகளை தாக்கல் செய்யலாம். எந்தவொரு நிறுவனமும் லோக்பாலில் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். இதற்கு https://cms.rbi.org.in இல் பதிய வேண்டும். எந்தவொரு வங்கியின் சேவையும் திருப்திகரமாக இல்லாவிட்டால் பொதுமக்கள் புகார் செய்யலாம்
ALSO READ | தீராத பண பிரச்சனையை தீர்த்து நிம்மதி அளிக்கும் வாஸ்து சாஸ்திரம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR