சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் உச்சகட்ட பரப்புரைகளை மெற்கொண்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசியத் தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். 


பாஜகவின் (BJP) உயர்மட்ட தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகத்தில் உள்ளனர்.


 ஆதாரங்களின்படி, பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வருகிறார். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்கிறார். இன்றைய் பிரச்சாரத்தைத் தொடர்ந்து பிரதமர் நாளை கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்வார்.


ALSO READ: வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்


மத்திய உள்துரை அமைச்சர் அமித் ஷாவும் (Amit Shah) இன்று புதுச்சேரி, திருக்கோவிலூர் மற்றும் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார். புதன்கிழமை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தனர்.


புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் உள்ள பல மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பல தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
நேற்று முன்தினம் பிரதமர் மோடி (PM Modi) புதுச்சேரிக்கு வருகை தந்து, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.


அமித் ஷா இன்று திருக்கோவிலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு அவர், பாஜக வேட்பாளர் விஏடி.கலிவரதனுக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.


திருக்கோவிலூரிலிருந்து அமித் ஷா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிக்குச் சென்று அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார். 


தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் தமிழகத்தில், இன்னும் தேர்தலுக்கு ஒரு சில தினங்களே மிஞ்சியுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. மனதை மயக்கும் வாக்குறுதிகள், ஆசையைத் தூண்டும் தேர்தல் அறிக்கைகள் என தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இவை அனைத்தையும் தாண்டி மக்கள் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


ALSO READ: தாயில்லா பிள்ளைகளாகிய எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR