குளிர்காலத்தில் எடை குறைப்பது கடினமாக உள்ளதா? கொய்யாப்பழம் சாப்பிடுங்க போதும்
Guava Benefits:உடல் எடையை குறைக்க சரியான செரிமானம் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கொய்யாப்பழம் உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தி எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: கொய்யா பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பழமாகும். ஏனெனில் அதன் சுவையில் புளிப்பு, இனிப்பும் கலந்திருக்கும். சிறிதளவு உப்புடன் சாப்பிட்டால், இது மிகவும் சுவையாக இருக்கும். எனினும், சிலர் குளிர்காலத்தில் கொய்யாவை உண்பதால் உடல் நலம் கெட்டுவிடும் என்று எண்ணி இதை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
குளிர்காலத்தில் கொய்யாப்பழம் அதிகமாக சாப்பிட்டாலும் பலன்களே கிடைக்கும். கொய்யா உங்கள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை நீக்குகிறது. மேலும் இது உடலில் அதிகரிக்கும் எடையைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. குளிர் காலத்தில், நாம் சூடான மற்றும் வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம். ஆனால் அதற்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்வதில்லை. ஆகையால், இந்த காலத்தில் உடல் எடை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. உடல் எடை கட்டுப்பாட்டில் கொய்யாப்பழம் எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க | பால் டீ குடிக்கிறீங்களா? இந்த 7 பிரச்சனை உங்களுக்கு வரலாம்
குளிர்காலத்தில் கொய்யாப்பழம் கொண்டு உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள்
கொய்யா உடலின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதில் வைட்டமின்கள் பி1, பி3, பி6 உள்ன. இதனுடன், கொய்யாவில் ஆரோக்கியமான தாதுக்கள், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இந்த பழத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. இதை சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பல நோய்கள் குணமாகும். கொய்யாப்பழத்தை சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் சிறந்ததாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க சரியான செரிமானம் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பழம் உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தி எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இனிப்பு உட்கொள்ளும் ஆவல் ஏற்படும்போதெல்லாம், அதற்கு பதிலாக கொய்யாவை சாப்பிடலாம். கொய்யாவும் அதிக ஆற்றலைத் தருகிறது. அதனால்தான் இந்த பழம் குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்றதாக கருதப்படுகின்றது.
இருமலில் பழுத்த கொய்யாவை சாப்பிட வேண்டாம்
வயிறு மற்றும் எடை அதிகரிப்பு தொடர்பான பிரச்சனைகளில் கொய்யாவுடன் யாரும் போட்டியிட முடியாது. இது வயிற்றை மென்மையாக்குகிறது. மேலும், நீங்கள் சில காரமான அல்லது கனமான உணவை சாப்பிட்டிருந்தால், உங்கள் வயிற்றில் எரியும் உணர்வை அமைதியாக வைத்திருக்கவும் கொய்யாப்பழம் உதவுகிறது.
எனினும், இருமல் ஏற்பட்டால் பழுத்த கொய்யாவை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது உங்கள் இருமலை மோசமாக்கும். வயிற்றில் மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு இந்த பழம் உகந்தது. இது உங்கள் வயிற்றை சுத்தம் செய்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதய நோயாளிகளுக்கும் கொய்யா ஒரு மேன்மையான மருந்தாக செயல்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ