வயசானாலும் இளமையாக தோற்றமளிக்கும் நட்சத்திரங்கள்! எப்போதும் இளமை கொஞ்ச டிப்ஸ்
Beauty And Botex: தொலைகாட்சியிலும் சினிமாவில் பார்க்கும் நட்சத்திரங்கள் மட்டும், வீட்டில் இருக்கும்போது கூட எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள், வயதானாலும் பளிச்சென்ற சருமம் எப்படி அவர்களுக்கு வாய்க்கிறது?
செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் துடிப்பான பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் வசிக்கும் நமக்கு, அழகுணர்ச்சியும் அதிகம். பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி பிரமுகர்களின் பளபளப்பு மற்றும் கவர்ச்சியை போற்றும் போது, நம்முள் ஒரு கேள்வி இயல்பாக எழுகிறது. தொலைகாட்சியிலும் சினிமாவில் பார்க்கும் நட்சத்திரங்கள் மட்டும், வீட்டில் இருக்கும்போது கூட எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள், வயதானாலும் பளிச்சென்ற சருமம் எப்படி அவர்களுக்கு வாய்க்கிறது என்ற கேள்விகள் உங்களுக்கும் வந்ததுண்டா?
இதற்கான பதில் மேக்கப் என்ற ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடுமா என்றால், இல்லை என்பதே நேர்மையான பதிலாக இருக்கும்.
உண்மையில் மேக்கப் எனப்படும் ஒப்பனை மட்டுமே ஒருவரை அழகாக காட்டிவிடுமா என்ற கேள்விக்கான தேடல் மிகவும் நீண்டது ஆழமானது. பொதுவாக பிரபலங்கள் எப்படி தங்கள் இளமையை பராமரிக்கிறார்கள்? என்ற கேள்விக்கும் போடோக்ஸ் என்ற பதில் பிரபலமானது. இது, வயதாவதை மந்தப்படுத்தும் சிகிச்சைகளில் முக்கியமானது.
வயதானாலும், இளமையான தோற்றத்துடன் காணப்படும் பிரபலங்களின் அழகு ரகசியங்கள் தொடர்பான தகவல்களைத் தெரிந்துக் கொள்ள, பிரபல அழகுசாதன நிபுணரும் காஸ்மெடிக் கிளினிக் & ILACAD இன்ஸ்டிடியூட் இயக்குநருமான டாக்டர் மோனிகா கபூரிடம் பேசினோம். அவர் பகிர்ந்துக் கொண்ட தகவல்கள், அழகு சிகிச்சை மற்றும் நிரந்தரமாக அழகாக தோற்றமளிப்பது தொடர்பான தெளிவைக் கொடுக்கும்.
மேலும் படிக்க | உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா இல்லையா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
அழகிய தோற்றமும் பிரபலங்களும்
பாலிவுட், ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள், உட்பட பிரபலங்களில் பலர் வயதை மீறி, குறைபாடற்ற அழகை பெறுவதற்கு போடோக்ஸ் என்ற சிகிச்சையை மேற்கொள்கின்றனர். ஆனால், போடோக்ஸ் என்பது, அழகு தொடர்பான அனைத்து எதிர்பார்ப்புகளுக்குமான ஒரே தீர்வு இல்லை என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். என்றும் இளமையாக இருக்க மாயாஜாலம் செய்யும் வித்தை என்று எதுவும் இல்லை. அழகியல் கவலைகள் சிலவற்றைத் தீர்க்கப் பயன்படும் ஒரு கருவியே நவீன சிகிச்சைகள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
பிரபலங்களுக்கும் மற்றவர்களைப் போலவே இயற்கையாகவே வயதாகிறது. பொதுமக்களின் பார்வையில் இளமைப் பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அழுத்தம் அவர்களுக்கு இருக்கிறது. இதனால், அவர்கள் வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போடோக்ஸ் உட்பட பல்வேறு சிகிச்சைகளை நோக்கி செல்கின்றனர் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் மோனிகா கபூர் கூறுகிறார்.
போடோக்ஸ் (Botox)
போடோக்ஸ் என்பது ஒரு ஒப்பனை சிகிச்சையாகும், இது உலகளவில் பெரும் புகழ் பெற்றுள்ளது, இந்தியாவிற்கும் புதியதல்ல. க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் (bacterium Clostridium botulinum) என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்படுவது போடோக்ஸ். சருமத்தில் போடோக்ஸ் செலுத்தப்படும்போது, தசைகளை தற்காலிகமாக முடக்கி, சுருக்கங்கள் மற்றும் கோடுகளை திறம்பட குறைக்கிறது. விரைவான மற்றும் ஆக்கிரமிப்பு இல்லாத தன்மை காரணமாக, போடோக்ஸ் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் புகழைப் பெற்றுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
மேலும் படிக்க | தமன்னாவின் அழகு ரகசியம் இதுதானா..? பளபள தேகத்திற்கு இதை ஃபாலோ பண்ணுங்க!
போடோக்ஸ் உண்மையில் விரைவான மற்றும் ஆக்கிரமிப்பு இல்லாத தீர்வாக இருந்தாலும், பிரபலங்கள் அல்லது பொதுமக்களுக்கு இது மட்டுமே வயதான தோற்றத்தை இளமையாக மாற்றும் ஒரே விருப்பம் அல்ல என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். சர்வதேச பிரபலங்களைப் போலவே, இந்தியப் பிரபலங்களும் தங்களுடைய அழகியல் அக்கறைகளை நிவர்த்தி செய்வதற்கும் இளமைத் தோற்றத்தைப் பராமரிப்பதற்கும் பல சிகிச்சைகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
அழகை நீட்டிக்கச் செய்யும் சிகிச்சைகளில், டெர்மல் ஃபில்லர்ஸ் (Dermal Fillers), லேசர் சிகிச்சைகள், கெமிக்கல் பீல்ஸ் (Chemical Peels), PRP சிகிச்சை (Platelet-Rich Plasma), மைக்ரோனீட்லிங் (Microneedling), ஃபேஸ்லிஃப்ட் மற்றும் அறுவை சிகிச்சை (Facelifts and Surgical Procedures) என பல வழிகளையும் அறுவை சிகிச்சை முறைகளையும் அடங்கும். இந்த நடைமுறைகள் முகத்திற்கு மிகவும் இளமைத் தோற்றத்தைக் கொடுக்கும் வகையில், அடிப்படை திசுக்களை இறுக்குவது மற்றும் இடமாற்றம் செய்வது என அழகை நீட்டிக்க பயன்படுத்தப்படுபவை.
ஆனால், அனைத்து பிரபலங்களும் தீவிரமான அழகு சிகிச்சைகளுக்கு செல்வதில்லை அல்லது அதை மிதமான அளவிலேயே மேற்கொள்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது. சிலர் தோல் சுருக்கங்களை குறைக்க, எப்போதாவது மட்டுமே போடோக்ஸைப் பயன்படுத்தலாம், மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள், சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி என அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.
அதேபோல, அனைத்து பிரபலங்களும் தங்கள் இளமைப் பொலிவை தக்க வைத்துக் கொள்வதற்காக அழகுசாதனப் பொருட்களில் அதிலும் குறிப்பாக செயற்கை பொருட்களை நாடுவதில்லை என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். சிலருக்கு இயற்கையாக உடலில் நல்ல மரபணுக்கள் இருக்கும் என்பதால், நீண்ட காலத்திற்கு இளமையான தோற்றத்தை இயற்கையாகவே பெற்றிருப்பார்கள். மற்றும் சிலர், அழகுப் பொருட்களை பயன்படுத்தினாலும், உயர்தர தயாரிப்புகள், அழகு நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று அவற்றை மேற்கொள்வது என பயனுள்ள தோல் பராமரிப்பு முறைகளைத் தேர்வுசெய்து அழகாக தோற்றமளிக்கின்றனர்.
மேலும் படிக்க | ‘கேப்டன் மில்லர்’ நாயகி பிரியங்கா மோகனின் அழகுக்கான காரணம் இதுதான்..!
போடோக்ஸ் உட்பட எந்தவொரு ஒப்பனை செயல்முறையையும் மேற்கொள்வதற்கான முடிவு, தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களுடன் கவனமாக பரிசீலித்து ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார். மேலும், இந்த சிகிச்சைகளை பிரபலங்கள் மட்டுமே அணுக முடியும் என்ற கருத்து தவறானது. போடோக்ஸ், டெர்மல் ஃபில்லர்ஸ் மற்றும் பீல்ஸ் உள்ளிட்ட பல ஒப்பனை நடைமுறைகள், நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கிளினிக்குகளில் கிடைக்கின்றன.
இளமையாக இருக்க விரும்புவது அனைவரின் இயல்பான விருப்பம் தான். ஆனால், இயற்கையாக வயதாவதை ஏற்றுக் கொள்வதற்கும், ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு கிடைக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்துவதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது அவசியம். நமக்குப் பிடித்த நட்சத்திரங்களின் இளமையான தோற்றத்தைக் நாம் ஆச்சரியம் அடையும் அதேவேளையில், வயதுக்கு ஏற்ப முதிர்ச்சியடைவதற்கு ஒரே மாதிரியான அணுகுமுறை காரணம் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
ஒரு நபருக்கு ஒத்துப் போகும் அழகுக் குறிப்புகளும், சிகிச்சைகளும் மற்றொருவருக்கு வேலை செய்யாமல் போகலாம், மேலும் எந்தவொரு ஒப்பனை செயல்முறையையும் மேற்கொள்வதற்கு முன்னதாக, மருத்துவ நிபுணர்களுடன் கவனமாக பரிசீலித்து ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்ட சுயமான முடிவாக இருக்க வேண்டும்.
போடோக்ஸ் என்பது பிரபலங்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரே மாதிரியான வயதான எதிர்ப்பு நடைமுறைகளில் ஒரு கருவியாகும் என்றாலும், அது விரைவில் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தி, இளமையை என்றென்றும் தக்கவைக்கும் ஒரு மாயத் தீர்வு அல்ல, அழகு மற்றும் சுய மதிப்பின் அளவுகள் எப்போதும் ஒன்றாக இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளுடன், இயற்கையாகவே வயதாகும் என்பது அடிப்படையானது என்பதை மறந்துவிடக்கூடாது. மாறிவரும் நமது உடல் தோற்றம் தொடர்பான நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பது மிகவும் அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மையான அழகு என்பது, சுருக்கங்கள் அல்லது சருமத்தில் ஏற்படும் கோடுகளால் உருவாவது அல்ல, மனதில் இருந்து பிரகாசிக்கும் அற்புதமான ஒன்று என்பதை புரிந்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ