குறைந்த சர்க்கரை அளவின் அறிகுறிகள்: மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுமுறை காரணமாக நீரிழிவு நோய் தீவிர நோயாக மாறி வருகிறது. ஒருவருக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்திருந்தால், அவர் உணவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் மருந்து அல்லது இன்சுலின் உதவியுடனும் அதைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், சர்க்கரையின் அளவு அதிகரிப்பது எவ்வளவு தீவிரமான விஷயமோ, அதே அளவு, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் மிகவும் ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரத்தச் சர்க்கரைக் குறைவு ஹைபோக்ளைஸீமியா என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனினும், இதைப் பற்றிய சரியான புரிதல் உங்களிடம் இருந்தால், அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக சிகிச்சை செய்யலாம். இரத்தச் சர்க்கரைக் குறைவைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


குறைந்த இரத்த சர்க்கரை அளவு: அறிகுறிகள்


- இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருக்கும்போது தலைவலி ஏற்படுகிறது.


- நடுக்கம், தலைச்சுற்றல், பசி, குழப்பம், எரிச்சல், இதயத் துடிப்பு அதிகரித்தல் ஆகியவையும் குறைந்த சர்க்கரையின் அறிகுறிகளாகும்.


- தோல் மஞ்சள் நிறமாதல், வியர்வை மற்றும் பலவீனம்


- இந்த அறிகுறிகள் புறக்கணிக்கப்பட்டால் வலிப்புத்தாக்கங்களும் ஏற்படலாம்.


- ரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருந்து, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், கோமா நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது.


மேலும் படிக்க | Health Alert: ஒப்பனைப் பொருட்களில் ‘இது’ இருந்தால், அவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்


இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏன் குறைகிறது?


- இரத்தச் சர்க்கரைக் குறைவு பல காரணங்களால் ஏற்படலாம்.


- அதிகப்படியான மருந்து மற்றும் இன்சுலின் ஊசி பயன்பாட்டால் சர்க்கரை அளவு குறையலாம். 


- நீரிழிவு நோயாளிகள் உணவைத் தவிர்த்தால் அல்லது குறைவான உணவை உட்கொண்டால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு குறையக்கூடும். 


குறைந்த இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த குறிப்புகள்


- மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரத்த சர்க்கரை அளவை தினமும் பரிசோதிக்கவும்.


- வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் கண்டிப்பாக காலை உணவை உட்கொண்ட பின்னரே வெளியேறவும்.


- இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருக்கும் போது கார்போஹைட்ரேட் நிறைந்த தின்பண்டங்களை உண்ணுங்கள்.


- ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்தால், அதை அதிகரிக்க இனிப்புகள், சாக்லேட் போன்றவற்றை கொடுக்க வேண்டாம். சர்க்கரை, வெல்லம், குளுக்கோஸ் பவுடர் போன்றவற்றை உட்கொள்ளலாம். 


- அரை கப் பழச்சாறு குடிக்கலாம்.


- இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்போது ஓஆர்எஸ் கரைசலை குடிப்பதன் மூலம் சரியான அளவை எட்டுகிறது. 


- ஒரு கப் பால் குடிக்கவும். ஒரு ஸ்பூன் தேனையும் எடுத்துக் கொள்ளலாம்.


(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஐஸ் போல் தொப்பை கொழுப்பு கரையுமா? அப்போ இந்த 7 பானங்கள் தான் ஒரே தீர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ