இன்டர்மிடென்ட் பாஸ்டிங்: உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற தவிப்பு 99 சதவிகித மக்களிடையே இருக்கிறது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற பழமொழியை நிதர்சன மொழியாக்குவது ஒல்லியாக வேண்டும் என்ற எண்ணம் என்பது உண்மையான் ஒன்று. உண்மையில் உடல் எடையைக் குறைப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்கிறது இண்டெர்மிடெண்ட் பாஸ்டிங் என்னும் சுலப வழி. இன்டர்மிடென்ட் பாஸ்டிங் செயல்முறையில் ஒருவர் 12 முதல் 18 மணி நேரம் வரை நீண்ட நேரத்திற்கு சாப்பிடாமல் இருக்கலாம் அல்லது சில உணவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களிடையே இந்த முறை பிரபலமாகி வருகிறது. சமீப ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, எடை குறைப்பு முறை குண்டான உடல்வாகு கொண்ட நபர்களுக்கு சாதகமான முடிவுகளைத் தந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் செய்பவர்களுக்கு நல்ல செய்தியை சொல்கிறார் Nutri4Verve இன் தலைமை ஊட்டச்சத்து நிபுணரும் நிறுவனருமான ஷிவானி சிக்ரி. உடல் எடை கட்டுப்பாட்டிற்கும், தொப்பை மற்றும் ஊளைச்சதையை குறிப்பதகும் இந்த உணவு முறை எப்படி உதவுகிறது என்று அவர் தெளிவாக விளக்குகிறார்.


மேலும் படிக்க | இளநரை பிரச்சனை பாடாய் படுத்துதா? இந்த விஷயங்களில் கவனமா இருங்க


இண்டர்மிடெண்ட் உணவு முறையை கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருப்பது என்பது, கலோரிகள் அதிகமாக உடலில் சேராமல் இருக்க உதவுகிறது. நீண்ட காலத்திற்கு பின்பற்ற எளிதான இந்த இண்டர்மிடெண்ட் உணவு முறையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.


இந்த உணவு முறை, இருதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும், ஏனெனில் இது இருதய ஆபத்து காரணிகளான, இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு அளவைக் குறைக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த உணவு முறை, செல்லுலார் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று தொடர்ச்சியான ஆய்வுகள் காட்டுகின்றன.



குறிப்பிட்ட சில மணி நேரங்கள், உணவு உண்ணாமல் இருப்பதால், ஒரு வகையான வளர்சிதை மாற்ற "மாறுதல்" ஏற்படும். இது, எளிதில் கிடைக்கக்கூடிய சர்க்கரை அடிப்படையிலான எரிபொருளைக் குறைத்து, மெதுவான வளர்சிதை மாற்ற செயல்முறையின் மூலம் கொழுப்பை ஆற்றலாக, அதாவது கீட்டோன் வடிவில் மாற்றத் தொடங்கும் போது உடலில் உள்ள் கொழுப்புகள் குறைகிறது.


இந்த மாற்றம், இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்த எதிர்ப்பை மேம்படுத்துகிறது என்பதோடு, உடல் பருமனையும் குறைக்கிறது. இந்த உணவு முறையை கடைப்பிடிக்கும்போது, ஆற்றல் மூலமாக மட்டுமல்ல, வளர்சிதை மாற்றத்தில் அத்தியாவசிய விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன என்பது இதன் ஆக்கப்பூர்வமான விளைவாக இருக்கிறது.


மேலும் படிக்க | உணவில் அதிக தக்காளி சேர்த்துக் கொண்டால் ஏற்படும் சிக்கல்கள்


குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உணவு உண்ணாமல் இருப்பது, உடல் செயல்திறனை மேம்படுத்துவதோடு மூளை ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் என்பது உறுதியானது. ஆனால், ஆரோக்கியம் மற்றும் எடையை பாதிக்கும் உணவுகளும், உணவு உண்ணும் அளவும் சாப்பிடும் நேரமும் உடல் எடை குறைப்பில் முக்கியமானது.



உண்மையில், நமது சர்க்காடியன் ரிதம் (விழித்தல் மற்றும் தூங்குவதன் மூலம் 24 மணிநேர சுழற்சியில் உடலை ஒழுங்குபடுத்துதல்) தினசரி செயல்பாட்டின் போது சில வகையான ஊட்டச்சத்துக்கள் வித்தியாசமாக வளர்சிதைமாற்றம் செய்யப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது.


இந்த சர்க்காடியன் ரிதம் (circadian rhythm) குறிப்பிடத்தக்க வகையில் ஹார்மோன்களின் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் (இன்சுலின்), மன அழுத்தம் (கார்டிசோல்) அல்லது உயிரியல் பாலினம் (டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன்) ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்தாலும், கொழுப்பை சேமிப்பதிலும் வெளியிடுவதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.


எனவே, இண்டர்மிடெண்ட் உணவு முறையை எந்தவிதமான நோய் பாதிப்பும் இல்லாதவர்களும், மருத்துவ சிகிச்சையில் இல்லாதவர்களும் தாராளமாக கடைபிடிக்கலாம். இந்த ஊணவு முறையை பின்பற்றி உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்கலாம்.


மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை கரைக்கும் ‘மேஜிக் டிரிங்க்’; தயாரிப்பது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ