இளநரையை தடுக்கும் வழிமுறைகள்: முந்தைய காலத்தில், தலையில் வெள்ளை முடி வந்தால், அது முதுமையின் அறிகுறியாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில், 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கூந்தல் வெள்ளையாகத் தொடங்குகிறது. இதன் காரணமாக, இளைஞர்கள் அடிக்கடி சங்கடத்தை அனுபவிப்பதோடு அவர்கள் தங்கள் நம்பிக்கையையும் இழக்கிறார்கள். இளநரை ஏற்பட்டால் அதை இயற்கையான முறையில் சரி செய்ய பல வழிகள் உள்ளன. இளநரை பிரச்சனையிலிருந்து நிவாரனம் அளிக்கும் சில எளிய உதவிக்குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
முடி நரைப்பதை நிறுத்த இயற்கை வைத்தியம்
1. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்
நம் உடலின் பெரும்பாலான பிரச்சனைகள் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படுகின்றன. இதற்கு முடி நரைக்கும் பிரச்சனையும் விதிவிலக்கல்ல. இன்றைய காலக்கட்டத்தில் உள்ள இளைஞர்கள் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் ஆரோக்கியமற்ற மற்றும் துரித உணவுகளை சந்தைகளில் சாப்பிட விரும்புகிறார்கள். வயிறு சரியில்லை என்றால், அதன் விளைவு கண்டிப்பாக கூந்தலில் தெரியும். உங்கள் தினசரி உணவில் வைட்டமின்கள், கால்சியம், புரதம், துத்தநாகம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக் டிரிங்க்’; தயாரிப்பது எப்படி
2. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
சிகரெட், பீடி, ஹூக்கா போன்றவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் ஆகும். இவற்றில் இருந்து வெளிவரும் புகை நுரையீரலைக் கெடுக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் புகைபிடிப்பதால் இளநரை பிரச்சனையும் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய இளைஞர்களிடம் இந்த கெட்ட பழக்கம் அதிகமாக இருப்பதால், கூந்தலின் ஆரோக்கியம் கெட்டுவிடுகிறது.
3. பதற்றத்தை குறைக்கவும்
மன அழுத்தம் பல நோய்களுக்கு அடிப்படையாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஆரோக்கியமான மனம் இல்லாமல் ஆரோக்கியமான உடலை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. டென்ஷன் காரணமாக கூந்தல் நரைக்கும் என்றும் அப்படி கூந்தல் நரைத்தால், அதன் காரணமாக டென்ஷன் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே அன்றாட வாழ்க்கையில் அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
4. தைராய்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
நம் உடலில் தைராக்ஸின் ஹார்மோன் அதிகமாக வெளியாகும் போது, அது நரை முடி பிரச்சனையை உண்டாக்கும். ஹைப்போ தைராய்டிசத்தைத் தவிர்க்க, நீங்கள் தைராய்டு பரிசோதனையும் செய்துகொள்வது நல்லதாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மலச்சிக்கல் முதல் குடல் எரிச்சல் வரை: குடல் பிரச்சனைகளுக்கு காரணமாகும் மழைக்காலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ