சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வலுயுறுத்திவிட்டு, அரசே அதிகளவு பொருட்களை சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு லடாக்கில் கால்வனில் உள்ள உண்மை கட்டுப்பாட்டுக் கோடு (LAC) தொடர்பாக இத்தியா-சீனா பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சீனாவில் ஆளும் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார். 


READ | தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்த காங்கிரஸ்... லடாக் கவுன்சிலர் அதிர்ச்சி தகவல்...!!!


​​காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட, ஆளும் பாஜக அரசின் போது தான் (இந்தியா-சீனா தகராறின் போது) அதிக அளவில் சீன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஒரு விளக்கப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.



இந்த பதிவிற்கு அவர் தலைப்பிடுகையில்., "இந்திய பொருட்களை வாங்க வேண்டும் என மக்களை அரசு வலியுறுத்துகிறது, ஆனால் தகவல்கள் அரசு தான் அதிகமாக சீன பொருட்களை இறக்குமதி செய்வதாக காட்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.


ராகுல் காந்தி பகிர்ந்துகொண்ட வரைபடத்தின் படி, '2009 மற்றும் 2014-க்கு இடையில், சீனாவிலிருந்து மொத்த இறக்குமதி 14 சதவீதமாக இருந்துள்ளது. அதே நேரத்தில் மோடி அரசு இந்த புள்ளியை அதிகபட்சம் 18 சதவீதம் வரை கொண்டு சென்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கிழக்கு லடாக்கின் பல இடங்களில், இந்தியா மற்றும் சீனாவின் படைகள் கடந்த ஏழு வாரங்களாக நேருக்கு நேர் மோதல் நடத்தி வருகின்றன. முன்னதகா கடந்த ஜூன் 15 அன்று கால்வன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் சீன படையினரால் கொல்லப்பட்ட பின்னர் எல்லைப்பகுதியில் பதற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.


எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்க இரு தரப்பினரும் இரண்டு சுற்று உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில், ஜூன் 22 அன்று, கிழக்கு லடாக்கில் பதட்டமான இடங்களில் இருந்உத 'பின்வாங்க' இரு தரப்பினரும் ஒரு பரஸ்பர உடன்பாட்டை எட்டினர்.


READ | ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் தமிழக பெண்களுக்கு ரூ.610 கோடி...


எனினும் இந்தியாவிற்குள் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்களைக் கட்டுப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் 59 சீன பயன்பாடுகளை நாட்டிற்குள் பாஜக தலைமையிலான அரசு திங்கள்கிழமை தடை செய்தது. 59 சீன பயன்பாடுகளை தடை செய்வதற்கான முடிவை வரவேற்ற காங்கிரஸ், திங்களன்று, மத்திய அரசு இன்னும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.