ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் தமிழக பெண்களுக்கு ரூ.610 கோடி...

கொரோனா (COVID-19) தொற்றுநோயை சமாளிக்க, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு ரூ.6,600 கோடி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 26, 2020, 06:47 AM IST
  • சீனாவில் இருந்து நமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதியில் எந்த பிரச்சனையும் இல்லை, இது உற்பத்தியை விரைவுபடுத்துகிறது மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
  • ஆனால் ஒரு இறக்குமதி நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்காவிட்டால் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாவிட்டால், அந்த வகை இறக்குமதியை செய்ய அனுமதிக்க முடியாது. இந்த வகை இறக்குமதி இந்திய பொருளாதாரத்திற்கு பயனளிக்காது.
ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் தமிழக பெண்களுக்கு ரூ.610 கோடி... title=

கொரோனா (COVID-19) தொற்றுநோயை சமாளிக்க, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு ரூ.6,600 கோடி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தவிர, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் பல்வேறு நலத் திட்ட கூறுகள் மூலம் ஜூன் 14-ஆம் தேதி வரை மொத்தம் ரூ.2,825 கோடி மதிப்புள்ள உதவி மாநிலத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

READ | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பணி அளிக்க ரூ.50000 கோடியில் திட்டம்...

பாஜக-வின் தமிழ்நாடு பிரிவு தொண்டர்களுடன் மெய்நிகர் சந்திப்பில் பங்கேற்ற நிதியமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார். மேலும் இந்த சந்திப்பின் போது அவர், உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களுக்கு மாற்றாய் வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ், சுமார் 8.64 கோடி மக்களை சென்றடையும் விதமாக தமிழகத்திற்கு அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டுள்ளது. ஜன தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மொத்தம் ரூ.610 கோடி தமிழ்நாட்டிற்கு சென்றடைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 1.22 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்திலிருந்து ஜூன் 11 வரை மாநிலத்தில் சுமார் 47,000 MSME-களுக்கு 1,937 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது அவர், சீன பொருட்கள் பயன்பாட்டை குறைப்பது குறித்தும் வலியுறுத்தினார். இதனை வலியுறுத்தும் விதமாக அவர், "பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக இறக்குமதி செய்வதில் தவறில்லை, ஆனால் சீனாவிலிருந்து தான் விநாயகர் சிலை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை" என குறிப்பிட்டார்.

"சீனாவில் இருந்து நமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதியில் எந்த பிரச்சனையும் இல்லை, இது உற்பத்தியை விரைவுபடுத்துகிறது மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆனால் ஒரு இறக்குமதி நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்காவிட்டால் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாவிட்டால், அந்த வகை இறக்குமதியை செய்ய அனுமதிக்க முடியாது. இந்த வகை இறக்குமதி இந்திய பொருளாதாரத்திற்கு பயனளிக்காது" என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

விநாயகர் சிலை களிமண்ணால் ஆனது, இந்தியாவிலும் களிமண்ணால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகள் கிடைக்கிறது. ஆனால் நம் மக்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று உள்ளூர் குயவர்களிடமிருந்து சிலைகளை வாங்குவதற்கு பதிலாக., சீனாவில் இருந்தே சிலைகளை வாங்க நாட்டம் காட்டுகின்றனர்... இந்த நிலைமை ஏன்... களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை உருவாக்க முடியவில்லையா...?"

READ | மோடி அரசின் புதிய திட்டத்தால் சுகாதார ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்...

விநாயகர் சிலை ஒருபுறம் இருக்க, சோப்பு பெட்டி, பிளாஸ்டிக் பொருட்கள், அகர்பத்தி போன்ற பொருட்களையும் இறக்குமதி செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இது நிச்சையம் ஆச்சரியமாக தான் இருக்கிறது. இதுபோன்ற பொருட்களை உள்நாட்டு மட்டத்தில் கொள்முதல் செய்வதிலும், உள்ளூர் மட்டத்தில் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) உற்பத்தி செய்வதிலும் இந்தியாவின் தன்னம்பிக்கை ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு மாற்றாய் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் இந்த சந்திப்பின்போது அவர் கேட்டுக்கொண்டார்.

Trending News