புதுடெல்லி: பிரபலங்கள் நட்பாகப் பழகுவதும், காதலிப்பதாக சொல்லப்படுவதும் பிறகு அது வதந்தியாகவே நின்று போய்விடுவதும் மிகவும் இயல்பான ஒன்று. பிரபலமாக இருப்பதால் அவர்கள் கொடுக்கும் களப்பலிகளில் முக்கியமானதாக இருப்பது அவர்களின் காதல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபலங்கள் என்றால் அதில் பாலிவுட் நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் முதல் வரிசையில் இடம் பெறுகின்றனர். பொழுதுபோக்கு உலகில் முக்கியமான இடம் பிடிக்கும் ஹிந்தி சினிமாவுடன் இணைந்தவர்களும், கிரிக்கெட் உலகத்தில் கொடி கட்டி பறக்கும் ஜாம்பவான்களுக்கும் இடையிலான சில காதல் பூக்கள் என்றென்றும் மணம் பரப்பும் வகையில் திருமணத்தில் முடிவடைந்திருக்கின்றன என்றாலும் பல மனப்பிரிவில் வாடிப் போயிருக்கின்றன.


இணைவும், பிரிவும் என்றும் ரயில் தண்டவாளங்கள் போன்றதே. அதிலும் பிரபலங்களின் காதலும், பிரிவும் அவர்களுக்கு வலி என்றால், பிறருக்கு செய்தியாகவும், மெல்லும் வாய்க்கு அவலாகவும் மாறிவிடுகின்றன.   


Read Also | 13 வயதில் 41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட பிரபலத்தின் Love Story


கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பட நடிகைகளுக்கு இடையிலான காதல் விவகாரங்கள் பற்றிய விவாதங்கள் பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகின்றன, அவை எதிர்காலத்திலும் தொடர்ந்து நடக்கும்.


இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் பாலிவுட் நடிகைகளுக்கும் இடையே தொடர்பானது சில நேரங்களில் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக மாறும், சில சமயங்களில் அவர்களின் உறவு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருக்கும். அத்தகைய ஒரு காதல் கதை தான் முன்னாள் இந்திய வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி மற்றும் சைஃப் அலிகானின் முதல் மனைவி அமிர்தா சிங் ஆகியோரின் காதல்.


பிரபல நடிகை அமிர்தா சிங் அனைவரின் மனம் கவர்ந்தவர் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் உண்டு.  ரவி சாஸ்திரியும் அமிர்தா சிங்கும் ஒருவருக்கொருவர் காதலித்து டேட்டிங் செய்து கொண்டிருந்த காலம் இது. இருவரும் தங்கள் காதலில் மிகவும் தீவிரமாக இருந்தனர் என்றும், திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் செய்திகள் உலா வந்தன.


Read Also | பயத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்


ஆனால் அவர்களது காதல் மலர் மொட்டாகவே கருகிவிட்டது.  காதல் மொட்டு திருமணமாக மலர்வதற்கு முன்னதாகவே காதலர்கள் பிரிந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.


80 களில், மிகவும் பிரபலமாக இருந்த கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரிக்கு லட்சக் கணக்கான ரசிகர்கள் இருந்தனர்.  இருந்தாலும் ரசிகைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமான அளவில் இருந்தது.  அவரது ரசிகைகளில் ஒருவர் அப்போதைய பிரபல நடிகை அமிர்தா சிங்.


பல்வேறு நிகழ்ச்சிகளிலும் விருந்துகளிலும் ரவியும் அமிர்தாவும் ஒன்றாகக் கலந்துக் கொள்வதைக் காணமுடிந்தது. ரவி சாஸ்திரியை உற்சாகப்படுத்த அமிர்தா கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.


ஒரு பிரபலமான பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் அமிர்தாவும் ரவியும் ஒன்றாகக் காணப்பட்டனர், அதன் பிறகு அவர்களது உறவு குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. இந்த புகைப்படத்தின் மூலம், அவர்கள் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு பறை சாற்றினார்கள். அந்த சமயத்தில், அதாவது 1986 ஆம் ஆண்டில் ரவி சாஸ்திரிக்கும் அமிர்தா சிங்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.


Also Read | China: வெள்ளதால் சீரழியும் சீனாவில் IV நிலை அவசரகால எச்சரிக்கை


ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும், இருவரின் உறவும் திருமணத்தை நோக்கி முன்னேறாமல், பிரிவாக பின்னேறிவிட்டது. அதன்பிறகு ரவி சாஸ்திரி ஒரு நேர்காணலின் போது குறியிருந்த விஷயமானது, பிரிவின் காரணத்தை கோடிட்டுக் காட்டியது போல் இருந்தது. 'என் மனைவி நடிகையாக இருப்பதை நான் விரும்பவில்லை. என் மனைவியின் முதல் விருப்பம்  குடும்பமாக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்' என்று சாஸ்திரி கூறியிருந்தார்.


ரவி சாஸ்திரியின் கருத்து வெளியான சில நாட்களில், அமிர்தா சிங்கும் தனது பதிலை மற்றொரு நேர்காணலில் கொடுத்தார்: 'தற்போது எனது வாழ்க்கையில் கவனம் செலுத்தவே நான் விரும்புகிறேன். எனவே என்னால் இந்த உறவைத் தொடர முடியாது, ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு முழுநேர மனைவியாகவும் தாயாகவும் மாறுவேன் என்று நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன்’.


Also Read | விளையாட்டு வீராங்கனை கரானோவின் வைரலாகும் topless photos


சில வருட தீவிர காதலுக்குப் பிறகு, ரவி சாஸ்திரியும் அமிர்தா சிங்கும் பிரிந்தனர், அதன் பிறகு 1990 ஆம் ஆண்டில் ரவி சாஸ்திரி ரிது சிங்கை மணந்தார்.  அதற்கு அடுத்த ஆண்டில் அதாவது 1991 இல், அமிர்தா சிங்கிற்கும், பாலிவுட் நடிகர் நவாப் சைஃப் அலி கானுக்கும் திருமணம் நடைபெற்றது.


முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் பிரபல நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சைஃப் அலி கான்.


தன்னை விட 12 வயது குறைவான நடிகர் சைஃப் அலி கானை இஸ்லாமிய திருமண முறைப்படி திருமணம் செய்து கொண்டார் அம்ரிதா சிங்.


ரவி சாஸ்திரிக்கு திருமணம் ஆன பிறகும் கூட அவரது பெயர் டிம்பிள் கபாடியா, நிம்ரத் கவுர் போன்ற பிரபலங்களுடன் அடிபட்டது.  ஆனால் அம்ரிதா சிங்குடனான ரவி சாஸ்திரியின் காதல் பிரிவானது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த ஒன்று.