புதுடெல்லி: காலிஸ்தானியர்கள் தொடர்பாக இத்தாலிக்கு கண்டனங்களை தெரிவிக்கும் இந்தியா, இங்கிலாந்துக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோம் நகரில் இத்தாலிய அதிகாரிகள் காலிஸ்தான் (Khalistan) தொடர்பான விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டும் இந்தியா,   நிலைமையை சரியாக கையாண்ட இங்கிலாந்து காவல்துறையை (Police) பாராட்டியது. ரோம் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தினத்திற்கு முன்னதாக காலிஸ்தானியர்கள் மேற்கொண்ட வன்முறைகள் கண்டிக்கத்தக்கது என்று இந்தியா தெரிவித்துள்ளது.


இரவு நேரத்தில், சமூக விரோத சக்திகள், இந்திய தூதரகத்தின் சுவர்களில் "காலிஸ்தான் வாழ்க" என்ற பொருள்படும் "Khalistan Zindabad" வாசகங்களை எழுதியிருந்தன. பின்னர் அதை வீடியோவாக எடுத்து   சமூக ஊடகங்களில் பதிவிட்டு பிரசாரங்கள் செய்தனர்.


Also Read | Tractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்


இது தொடர்பாக இந்தியா தெரிவித்துள்ள வலுவான கண்டனத்தில், இது "இரவின் இருளில் காலிஸ்தானிய தீவிரவாதிகள் செய்த காழ்ப்புணர்ச்சி செயல்" என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தைப் பற்றிக் கூறும் இந்திய (India) அரசாங்க வட்டாரங்கள், இந்த குறிப்பிட்ட சம்பவத்தை இத்தாலிய அதிகாரிகளுடன் பேசி தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


"இந்திய தூதரகம், அதன் வளாகம் மற்றும் அதில் பணிபுரிபவர்களின் மற்றும் பாதுகாப்பு இத்தாலிய அதிகாரிகளின் பொறுப்பு" என்பதை இந்தியா நினைவுபடுத்தியது, "குற்றவாளிகள் மீது இத்தாலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். அதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க வேண்டும்" என்ற நம்பிக்கையை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.  


காலிஸ்தானியர்கள், குறிப்பாக சீக் ஃபார் ஜஸ்டிஸ் (Sikh for Justice (SFJ)) போன்ற சட்டவிரோத குழுக்களின் ஆதரவுடன் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்க நாடுகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். குடியரசு தினத்திற்கு முன்னதாக, எஸ்.எஃப்.ஜே மற்றும் அதன் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு (Gurpatwant Singh Pannu) ஆகியோர் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு ஒரு அழைப்பை விடுத்திருந்தனர். அதில், இந்தியக் கொடியை செங்கோட்டையில் இருந்து அகற்றுமாறு கேட்டுக் கொண்டனர், அதற்காக "2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள்" பரிசுத்தொகையையும் அறிவித்திருந்தனர்.  


Also Read | Delhi-NCR சில பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கம்


டிசம்பரில் லண்டனில் (London) உள்ள இந்திய ஹை கமிஷன் மற்றும் பர்மிங்காமில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றின் முன்னால் காலிஸ்தானி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு லண்டனின் பெருநகர காவல்துறை உடனடியாக செயலாற்றினார்கள். கொரோனா தொற்று தொடர்பாக வெள்யிடப்பட்டிருக்கும் நெறிமுறைகளை மீறியதால், காலிஸ்தான் ஆதரவாளர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேசிய புலனாய்வு அமைப்பின் மோஸ்ட் வாண்டட் பட்டியலில் (National Investigation Agency's most wanted list) உள்ள பரம்ஜித் சிங் பம்மா (Paramjit Singh Pamma) கலந்து கொண்டார்.


லண்டனில் உள்ள இந்திய ஹைகமிஷனில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பதில்   லண்டன் பெருநகர காவல்துறையினர் மிகவும் துரிதமாகவும் சமயோஜிதமாகவும் செயல்பட்டதற்கு இந்தியா பாராட்டியுள்ளது.


Also Read | சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?


2019 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் வலுவான நடவடிக்கை, இந்திய ஹைகமிஷனில் காலிஸ்தானியர்கள் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் மேற்கொள்வதைத் தடுக்கிறது. 2019ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள், லண்டன் இந்திய ஹை கமிஷனின் ஜன்னலை உடைத்து குழப்பத்தை ஏற்படுத்தினர். அதன்பிறகு, லண்டன் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.


குடியரசு தினத்திற்கு முன்னதாக, உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் ஹைகமிஷன்   வளாகங்களின் பாதுகாப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளை தொடர்பு கொண்டது. இந்திய குடியரசு தினத்தன்று வாஷிங்டனில் உள்ள இந்திய ஹை கமிஷன் வளாகத்திற்கு எதிரில் காலிஸ்தானியர்கள் குழுமினார்கள். கடந்த டிசம்பர் மாதம், வாஷிங்டனில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை காலிஸ்தானிய ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். அதற்கு இந்தியாவும், அமெரிக்க அரசும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Also Read | Tractor பேரணியில் போலீசார் மீது வன்முறை தாக்குதல் வீடியோ வைரல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR