புதுடெல்லி: தேசியத் தலைநகர் டெல்லியில் சட்டம் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் சில இடங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
Internet services temporarily suspended in the areas of Singhu, Ghazipur, Tikri, Mukarba Chowk, Nangloi and their adjoining areas till 23:59 hrs on January 26: Ministry of Home Affairs (MHA)
— ANI (@ANI) January 26, 2021
பல இடங்களில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் (Tractor Rally) போராட்டங்கள் காரணங்களால் சில சாலைகள் வழியாக மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ”என்.எச் 44 (NH 44), ஜி.டி.கே சாலை, அவுட்டர் ரிங் சாலை (outer ring road), சிக்னேச்சர் பிரிட்ஜ் (Signature Bridge), ஜி.டி சாலை (GT road), ஐ.எஸ்.பி.டி ரிங் ரோடு (ISBT ring road), விகாஸ் மார்க், ஐ.டி.ஓ, என்.எச் 24, நிஜாமுடின் கட்டா (Nizammudin Khatta), நொய்டா இணைப்பு சாலை (Noida link road), பீராகரி (Peeragarhi) மற்றும் Outer Delhi” ஆகிய சாலைகள் வழியாக செல்வதை மக்கள் தவிர்க்கலாம். கிழக்கு மற்றும் மேற்கு டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Please avoid NH 44, GTK road, outer ring road, Signature Bridge, GT road, ISBT ring road, Vikas Marg, ITO, NH 24, Nizammudin Khatta, Noida link road, Peeragarhi & Outer Delhi, East & West Delhi border areas due to ongoing farmer protests: Delhi Traffic Police
— ANI (@ANI) January 26, 2021
குடியரசு தினத்தை முன்னிட்டு, ராஜபாதையில் குடியரசு தின (Republic Day) அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், விவசாயிகள் டிராக்டர்களைப் பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். காசிபூசிர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் அத்து சறியதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
Also Read | Tractor பேரணியில் கலந்துக் கொண்ட விவசாயி கொலை, போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமா?
அதேபோல், விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கப்பட்டது. போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை (Red Fort) பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு கோட்டைக் கொத்தளத்தில் ஏறி தேசிய கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியையும், வேறு சில கொடிகளையும் ஏற்றினர்.இதனால் தலைநகரில் பதற்றங்கள் அதிகரித்துள்ளது.
போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டையை சுற்றிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கலவரம் மற்றும் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு இணையதள வசதிகள் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
Also Read | Tractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR