WATCH: Tractor பேரணியில் போலீசார் மீது வன்முறை தாக்குதல் வீடியோ வைரல்

தேசியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் நாடே அதிர்ந்து போயிருக்கிறது. இந்த நிலையில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 26, 2021, 10:15 PM IST
  • விவசாயப் பேரணியில் போலீசார் மீது வன்முறை தாக்குதல் வீடியோ வைரல்
  • காவல்துறையினரை தாக்கும் போராட்டக்காரர்கள்
  • டிராக்டர் பேரணியில் நடந்த அசம்பாவிதம்
WATCH: Tractor பேரணியில் போலீசார் மீது வன்முறை தாக்குதல் வீடியோ வைரல்

புதுடெல்லி: தேசியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் நாடே அதிர்ந்து போயிருக்கிறது. இந்த நிலையில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களும் ஏற்பட்டன. இந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது வன்முறையை பிரயோகிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ பகிர்ந்த வீடியோ இது.

டெல்லி விவசாயிகளின் டிராக்டர் பேரணி தற்போது வேறொரு வடிவத்தை எடுத்துவிட்டது. பல இடங்களில் கண்ணீர்புகை வீசி கூட்டத்தினரை கலைத்தனர். சில இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. 

போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை (Red Fort) பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு கோட்டைக் கொத்தளத்தில் ஏறி தேசிய கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியையும், வேறு சில கொடிகளையும் ஏற்றினர்.இதனால் தலைநகரில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

Also Read | Tractor பேரணியில் கலந்துக் கொண்ட விவசாயி கொலை, போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமா?

விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டபோது, குழந்தைகள் உட்பட சுமார் 300 கலைஞர்கள் அங்கு இருந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த பின், நாங்கள் அவர்களுக்கு உணவை வழங்கி, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினோம், என்று டெல்ல்லி தரியகஞ்ச் டி.சி.பி (வடக்கு) அன்டோ அல்போன்ஸ் தெரிவித்தார்.

artists

குடியரசு தினத்தை முன்னிட்டு, ராஜபாதையில் குடியரசு தின (Republic Day) அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  ஆனால், விவசாயிகள் டிராக்டர்களைப் பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். காசிபூசிர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் அத்து சறியதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். 

இதைப் பார்க்கும்போது டெல்லியில் மேலும் வன்முறை வெடிக்குமோ என்ற அச்சச்சூழல் எழுந்துள்ளது. எனவே டெல்லியில் இரவில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. 
முன்னதாக, போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல், வேறு பாதையில் சென்றது டிராக்டர் பேரணி (Tractor Rally). தடையை மீறிய விவசாயிகள், டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்தனர். அங்கு, தங்களது அமைப்பின் கொடியை ஏற்றினர். தற்போது, அங்கு துணை ராணுவப்படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Also Read | Tractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

More Stories

Trending News