நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் :ஜனாதிபதிராம்நாத் கோவிந்த்

நாளை இந்திய சுதந்திர தினம் கொண்டாட படுகிறது. இதனையடுத்து இன்று இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரையாற்ற உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2018, 08:48 PM IST
நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் :ஜனாதிபதிராம்நாத் கோவிந்த்  title=

நான் மீண்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறேன். 

நன்றி

ஜெய் ஹிந்த்!

 

 


இந்தியா சகோதரத்துவத்தால் பின்னி பிணைந்துள்ளது. இந்தியா மக்களால் உருவானது. இந்தியா அரசாங்கத்திற்கு மட்டும் அல்ல.. மக்களுக்கு சொந்தமானது

 

 

 


நாம எல்லோரும் காந்தியின் பிள்ளைகள். நாம் தனியாக நடக்கையில் கூட, மனிதகுலத்திற்காக நாம் கனவு காண்கிறோம்

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 


நமக்கு சுதந்திர இந்தியாவை கொடுத்தனர். அதே சமயத்தில், நமக்கு பல பணிகள் இன்னும் உள்ளது. நாம் ஒன்றாக இணைந்து நாட்டின் வறுமை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

 


சுதந்திரத்துக்காக போராடியவர்கள் நினைத்திருந்தால் அவர்கள் வசதியான வாழ்க்கை வாழ முடிந்திருக்கும். ஆனால் நாட்டிற்கான அவரது அசைக்க முடியாத விசுவாசம் காரணமாக, அவர் இதைச் செய்யவில்லை.

 


நமது முன்னோர்கள் மற்றும் சுதந்திர போராளிகளின் தியாகம் மற்றும் வீரம் ஆகியவற்றின் விளைவாக சுதந்திரம் ஏற்பட்டது. சுதந்திர போராட்டத்தில் போராடி வந்த அனைத்து ஹீரோக்கள் மற்றும் போர்வீரர்களும், தைரியமானவர்களாகவும் தொலைநோக்குடையவர்களாகவும் இருந்தனர். சுதந்திர போராட்டத்தில் நாட்டின் எல்லா பகுதிகளிலும், பிரிவுகளிலும் உள்ள சமூகத்தினர் ஈடுபட்டார்கள்- ஜனாதிபதி

 


ஆகஸ்ட் 15 ஒவ்வொரு இந்தியருக்கும் புனிதமானது. நமது நாட்டின் அடையாளம் மூவர்ணக்கொடி ஆகும். இந்த நாளில் நாட்டினுடைய இறையாண்மையை நாம் கொண்டாடுகிறோம். நமது மூதாதையர்களின் நன்றியுணர்வைக் கொண்டாடுகிறோம்.

 


என் அன்பான நாட்டு மக்களே... இன்றுடன் 71 ஆண்டுகளாக சுதந்திரம் நிறைவடைகிறது. நாளை நமது 72_வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். இந்த தருணத்தில் அனைத்து மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்  தெரிவித்துக்கொள்கிறேன் 

 


நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாப்படுவதை முன்னிட்டு இன்று நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றி வருகிறார் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

 


இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அப்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதற்க்கு ஒரு நாள் முன்பாக இந்திய நாட்டின் குடியரசு தலைவர் சிறப்புரையாற்றுவது வழக்கம்.

இந்நிலையில், நாளை நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாப்படுகிறது. சுதந்திர தின சிறப்புரைக் குறித்து ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,

நாளை நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாப்படுகிறது. இன்று இரவு 7 மணிக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் மக்களுக்கு சிறப்புரையாற்றுவார். இந்திமற்றும் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அது மொழி பெயர்க்கப்பட்டு அந்தந்த மாநில மொழிகளில் ஒலிபரப்பப் படும் என செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

 

Trending News