இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
வங்கிகளில் வாங்கிய கடனை, விஜய் மல்லையா திரும்ப செலுத்தாததை தொடர்ந்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனிடையே அவர் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பித்துச் சென்றார்.
இதனையடுத்து இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், லண்டனில் விஜய் மல்லையா இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.
Vijay Mallya appeared in London's Westminster Court today. Mallya's side argued that he fears for his life in India, now prosecution is preparing a submission by the Indian government outlining the security measures that will be in place for him. pic.twitter.com/VQbuNt7Lzo
— ANI (@ANI) November 20, 2017
இந்நிலையில் இந்த வழக்கு அடுத்த மாதம் 4–ஆம் தேதி முதல் 14–ஆம் தேதி வரை விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.