7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அப்டேட், எப்போது அறிவிப்பு?
7th Pay Commission: அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகின்றன என்பதை அரசு ஊழியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அகவிலைப்படி உயர்வு சமீபத்திய அப்டேட்: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக் குழுவின் சம்பள தொகுப்பின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 2023-க்குள் சில நல்ல செய்திகள் கிடைக்கும். மார்ச் 2023க்குள் அவர்களது அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வு தவிர, ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணத்தையும் (டிஆர்) மத்திய அரசு அதிகரிக்கக்கூடும்.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம்
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகின்றன என்பதை அரசு ஊழியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். முதல் மாற்றம் ஜனவரியிலும் இரண்டாவது மாற்றம் ஜூலையிலும் செய்யப்படுகின்றது. இப்போது புதிய ஆண்டு நெருங்கி வருவதால், அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கக்கூடும். மார்ச் 2023க்குள், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய அதிகரிப்பு எப்போது நடந்தது?
2022 செப்டம்பரில் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியது. இதன் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர். அப்போது அரசாங்கம் 4 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன் பிறகு மொத்த அகவிலைப்படி 38 சதவிகிதத்தை எட்டியது. செப்டம்பர் மாத உயர்வுக்கு முன், மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் டிஏ வழங்கப்பட்டது. இது மார்ச் 2022 இல் 3 சதவீதம் உயர்த்தப்பட்டது.
7வது சம்பள கமிஷன் டி.ஏ
முன்னதாக கோவிட் தொற்றுநோய் காலத்தில் அகவிலைப்படி உயர்வை அரசாங்கம் முடக்கியது. ஜூலை 1, 2021 முதல், அரசாங்கம் அகவிலைப்படியை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூலை 2021 முதல், அகவிலைப்படி 17 இல் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டில் மாஸ் செய்தி, அறிவிப்பு எப்போது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ