மாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி! போட்டோ உள்ளே

Last Updated : Jun 16, 2018, 12:31 PM IST
மாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி! போட்டோ உள்ளே

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. தற்போது இதன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ்,ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு கதாநாயகியாக வித்யா இணைந்திருக்கிறார்.

 

 

தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.

More Stories

Trending News