பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாராவா? வைரலாகும் புகைப்படம்!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள `பொன்னியின் செல்வன்` படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா பொருத்தமானவர் என்று ரசிகர்கள் பலரும் கருதுகின்றனர்.
சோழர்களின் வரலாற்றை கூறும் விதமாக கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் கைவண்ணத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' படம் செப்டம்பர்-30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பு பெருகிக்கொண்டே வருகிறது. ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் தூண்டும் விதமாகவும் இப்படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, சோபிதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர், ரஹ்மான், ஜெயராம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | மீண்டும் தாத்தாவான ரஜினி! பேரனுக்கு இப்படி ஒரு பெயரா?
பொன்னியின் செல்வன் கதையில் ஒரு வலுவான கதாபாத்திரம் என்றால் அது நந்தினி கதாபாத்திரம் தான், இந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். ஆனால் சில ரசிகர்கள் நந்தினி கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் என்றும் இயக்குனர் மணிரத்தினம் இந்த கதாபாத்திரத்திற்கு அவரையே செய்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சோழர்களின் வரலாற்றை கூறும் பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாரா நடிக்கவில்லையே என ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.
ரசிகர்களை மகிழ்ச்சியாகும் அளவு அப்படி என்ன புகைப்படங்கள் என்றால் நயன்தாரா சோழ நாட்டு இளவரசி போல உடையணிந்திருக்கும் அழகான புகைப்படங்கள் தான். ஆனால் இந்த கெட்டப் பொன்னியின் செல்வன் படத்திற்காக அல்ல, மிக பிரபலமான ஒரு நகைக்கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இது, பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டுவதற்காக இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ