அசிங்கப்படுத்திய மனைவி...அப்பாவை ஹீரோவாக்கிய மகள்: விஜய் டிவி கோபிநாத் செய்த தரமான சம்பவம்

விஜய் தொலைக்காட்சி ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் மனைவி கணவனை அசிங்கப்படுத்தியபோது, அவரை தொகுப்பாளர் கோபிநாத் பெருமைப்படுத்திய வீடியோ இணையவாசிகளை நெகிழவைத்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 12, 2022, 10:16 AM IST
  • நீயா நானா நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்
  • கவணரை அசிங்கப்படுத்திய மனைவி
  • கௌரவித்து மகிழ்வித்த தொகுப்பாளர் கோபிநாத்
அசிங்கப்படுத்திய மனைவி...அப்பாவை ஹீரோவாக்கிய மகள்: விஜய் டிவி கோபிநாத் செய்த தரமான சம்பவம்  title=

விஜய் டிவியில் வாரந்தோறும் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமூக பிரச்சனைகள் குறித்தும், உறவுச் சிக்கல்கள் மற்றும் அதன் பின்னணியை அலசி ஆராய்வதோடு மட்டுமல்லாமல், நிபுணர்களை வரவழைத்து அவர்களின் பார்வையையும் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது. இந்த வாரம் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள்; குடும்பம் எப்படி சமாளிக்கிறது? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் உரையாடிய கணவன் மனைவி இருவரில், மனைவி கணவனின் படிப்பறிவில்லாமையை கேலியாக பேசினார். குழந்தையின் பிராகரஸ் ரிப்போர்டை ஒரு மணி நேரம் எழுத்துக்கூட்டி படித்துக் கொண்டிருப்பார் என்றெல்லாம் கூறினார். இதனைக் கேட்ட தொகுப்பாளர் கோபிநாத், படிப்பறிவில்லாத அவர், படிப்பறிவு இருக்கும் உங்களை திருமணம் செய்திருக்கிறார்.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் திரைப்படம் - முடிந்தது வியாபாரம்... முழு விவரம்

அவருக்கு தெரியாது என்பது பெரிய தவறில்லை. எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என கோபிநாத் பதில் கூறியபோதும், மனைவி அதனை ஏற்காமல் கேலியாக பேசிக் கொண்டிருந்தார். அதேநேரத்தில் அந்த கணவனிடம் பிள்ளையின் பிராகர்ஸ் ரிப்போர்டை ஏன் அவ்வளவு நேரம் பார்க்கிறீர்கள் என கேட்கிறார். தான் படிக்கவில்லை என்பதால் மகள் எடுத்திருக்கும் மார்க்கை பார்ப்பேன். என் மகளை ஒரு நல்ல மருத்துவராக பார்க்க வேண்டும் என விரும்புகிறேன் என நெகிழ்ச்சியாக கூறினார்.

இந்த பதிலைக் கேட்ட தொகுப்பாளர் கோபிநாத், மனைவியிடம் மீண்டும் கேட்கும்போது அவர் இன்னும் பழமையிலேயே இருக்கிறார். இப்போதைய காலத்திற்கு அவர் இன்னும் வரவில்லை எனக் கூறினார். இந்த பதிலை கோபிநாத் கேட்டதும், அவருக்கு கோபம் வந்துவிட்டது. உடனே, இந்த இடத்திலேயே நான் கூறுகிறேன், அவர் ஒரு சிறந்த அப்பா என அறிவித்து நிகழ்ச்சியின் பாதியிலேயே பரிசு கொடுத்தும் கவுரவித்தார். மேலும் மகளிடம் கேட்கும்போது, என் தந்தை எப்போதும் வெற்றி பெற்றவர் தான், அவர் எனக்காக தான் எல்லாமே செய்கிறார் என கூற அரங்கமே அதிர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இந்த வீடியோவை டேக் செய்து தொகுப்பாளர் கோபிநாத்துக்கு மனதார வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | நடிகர்கள் என்ன அம்பேத்கரா பெரியாரா?... சத்யராஜ் விளாசல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News