மீண்டும் தாத்தாவான ரஜினி! பேரனுக்கு இப்படி ஒரு பெயரா?

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியினை அவரது ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார்.  

Written by - RK Spark | Last Updated : Sep 12, 2022, 10:14 AM IST
  • சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
  • வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் வைத்துள்ளனர்.
  • ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சௌந்தர்யா.
மீண்டும் தாத்தாவான ரஜினி! பேரனுக்கு இப்படி ஒரு பெயரா?   title=

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, இதனால் குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது.  இயக்குனரும், ரஜினிகாந்தின் இளைய மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் 2010-ல் அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு வேத் என்கிற மகன் உள்ளார்.  அதன் பின்னர் சில காரணங்களால் இந்த தம்பதியர் விவாகரத்து பெற்றுக்கொண்ட நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் 2019ம் ஆண்டு விசாகன் வணங்காமுடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  சமீபத்தில் இரண்டாவது கணவர் மூலம் தாய்மை அடைந்த சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு நெருங்கிய நண்பர் மற்றும் உறவினர்கள் முன்னணியில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த்-விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது, இந்த மகிழ்ச்சியான செய்தியினை அவர் தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்ததோடு தனது மகனின் பெயரையும் தெரிவித்துள்ளார்.  புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் சூட்டியுள்ளனர்.  ஆனால் தனது குழந்தையின் முகத்தை காட்டாமல் கையை பிடித்திருப்பது போன்ற புகைப்படம், கர்ப்ப காலத்தில் எடுத்த சில புகைப்படங்கள், தனது குடும்ப புகைப்படங்கள் என சிலவற்றை மட்டும் பகிர்ந்துள்ளார்.

 

மேலும் படிக்க | நடிகர்கள் என்ன அம்பேத்கரா பெரியாரா?... சத்யராஜ் விளாசல்

அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், 'கடவுளின் ஆசீர்வாதத்தோடும், எங்கள் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடும் வேதின் சகோதரன் வீர் ரஜினிகாந்த் வணக்கமுடியை நானும், விசாகணும் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், சிறப்பான மருத்துவர்களுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.  இந்த குழந்தையால் இவர்களது குடும்பம் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.  தற்போது ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கிறார், 'தலைவர் 169' என தற்காலிகமா பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு சமீபத்தில் தான் 'ஜெயிலர்' என்று அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | திருமண விவகாரத்துக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்த சிம்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News