'விக்ரம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் ஐந்து நிமிடங்களே திரையில் வரும் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் இரக்கமற்ற வில்லனாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்து சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளார்.  அன்பான ஹீரோ என்று அழைக்கப்படும் சூர்யா, '24' படத்தில் ஆத்ரேயா என்கிற நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார், ஆனால் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பொருத்தவரை சூர்யாவின் வில்லத்தனம் வேறு லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.  மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 3’ படத்தில் சூர்யா நடிப்பார் என்பதை கமல் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஆரம்பிக்கலாங்களா...ரெண்டே நாளில் 100 கோடி வசூல்- விஸ்வரூபம் எடுத்த ‘விக்ரம்’!


கமலின் ‘விக்ரம்’, கார்த்தியின் 'டில்லி', ஃபஹத் ஃபாசிலின் 'அமர்' ஆகிய கதாபாத்திரங்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதில் சூர்யா தான் முக்கியமான வில்லனாக இருந்திருக்கிறார் என்பதை இந்த ‘விக்ரம்’ படம் தெளிவுபடுத்தியுள்ளது.  இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தனது தம்பி கார்த்திக்கு வில்லனாக நடிப்பேன் என்று சூர்யா எட்டு வருடங்களுக்கு முன்பே கணித்திருக்கிறார்.  சென்னையில் நடந்த இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவின் போது இயக்குனர் லிங்குசாமி அவரிடம், கார்த்தியும், நீங்களும் எப்போது ஒரு படத்தில் ஒன்றாக இணையலாம் என்று கேட்டார்.



அதற்கு பதிலளித்தவர், சிறுவயதில்தான் வீட்டில் அமைதியான வில்லனாகவும், கார்த்தி நல்ல பையனாகவும், தந்தை சிவகுமாருக்கு மிகவும் பிடித்தவராகவும் இருந்ததாகவும் கூறினார்.  மேலும் பேசியவர் நெற்றியில் பட்டை போட்டுகொண்டு கார்த்தி நடிக்கும் படத்தில் நான் சைலண்ட் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறினார்.  2019ல் வெளியான 'கைதி' படத்தில், கார்த்தி நெற்றியில் அவரது நெற்றியில் "விபூதி"யைப் பூசியிருப்பர்.  மேலும் கார்த்திக்கு எதிராக சூர்யா கணித்தது போல் வில்லனாக நடிக்க இப்போது அதிக வாய்ப்பு உள்ளது,  அது 'கைதி 2' அல்லது 'விக்ரம் 3' இல் இருக்குமா என்பது தான் இப்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.


 



மேலும் படிக்க | கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR