கோட் படத்தில் ரீ-யூனியன்! ஒன்னு விஜய்-சினேகா..இன்னோன்னு யார்?

The GOAT Movie Reunion : தி கோட் திரைப்படம் நாளை வெளியாவதை ஒட்டி, இப்படம் குறித்த தகவல்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 5, 2024, 05:51 AM IST
  • தி கோட் படத்தில் இரண்டு ரீயூனியன்
  • ஒன்னு விஜய்-சினேகா..
  • இன்னொன்னு யார்?
கோட் படத்தில் ரீ-யூனியன்! ஒன்னு விஜய்-சினேகா..இன்னோன்னு யார்?  title=

The GOAT Movie Reunion : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தி காேட்’ (The Greatest Of All Time) திரைப்படம் ஒரு வழியாக நாளை வெளியாகிறது. இந்த நிலையில், இப்படம் குறித்த பல தகவல்களையும், இதில் விஜய்-சினேகா தவிர வேறு யாரெல்லாம் பல ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கிறார்கள் என்பது குறித்தும் பார்க்கலாம். 

தி கோட் திரைப்படம்:

நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு தேர்தலில் நேரடியாக களமிறங்க இருப்பதை ஒட்டி, விரைவில் சினிமாவிற்கு டாடா சொல்லிவிட்டு அரசியலில் முழு நேரமாக களமிறங்க இருக்கிறார். இது, அவரது கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால், இதன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. படம் எப்படியிருந்தாலும் ரசிகர்கள் அதை மீண்டும் மீண்டும் தியேட்டரில் பார்த்து ஓட வைத்துவிடுவர். 

தமிழ் திரையுலகில், பெரும்பாலானோர் ரசிக்கும் படியான படங்களை இயக்கி தந்தவர் வெங்கட் பிரபு. தற்போது நடிகர் விஜய் தி கோட் படம் மூலமாக முதன்முறையாக அவருடன் கைக்காேர்த்திருக்கிறார். வெங்கட் பிரபு படம் என்றாலே யுவன் சங்கர் ராஜா இல்லாமல் எப்படி? அவர்தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விஜய்க்கு ஜாேடிகளாக சினேகா, மீனாட்சி செளத்ரி என இரண்டு பேர் நடித்திருக்கின்றனர். இதில், விஜய்க்கு அப்பா-மகன் என இரு கதாப்பாத்திரங்கள். 

விஜய்-சினேகா ரீ யூனியன்:

நடிகர் விஜய்யும் த்ரிஷாவும், லியோ படத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து ஜோடி சேர்ந்து நடித்தது பரவலாக பேசப்பட்டது. அதே போல 2003ஆம் ஆண்டு ‘வசீகரா’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த விஜய்யும்-சினேகாவும் 20 ஆண்டுகள் கழித்து தி கோட் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். இது, பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகவே இருந்தது. ஆனால், இப்படத்தில்  விஜய்-சினேகா மட்டும் ஒன்று சேரவில்லை. 

மேலும் படிக்க | 51 வயதாகும் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம்! மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..

இன்னொரு ரீ-யூனியன்..

நடிகை சினேகா, 20 ஆண்டுகளுக்கு முன்னர் திரையுலகில் ஆக்டிவாக இருந்தார். அவர் நடிகர் பிரசாந்துடன் சேர்ந்து விரும்புகிறேன், ஆயுதம், உள்ளிட்ட சில படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். பிரசாந்தின் பெரிய பட்ஜெட் படமான ‘பொன்னர் சங்கர்’ படத்தில் கூட அவர்தான் ஜோடி. தற்போது அவர்களும் பல ஆண்டுகள் கழித்து ஒரே படத்தில் ஒன்றாக நடிக்கின்றனர்.

Sneha Prashanth

கம்-பேக் கொடுக்கும் மைக் மோகன்..

80களில் பலருக்கு ஃபேவரட் ஹீரோவாக இருந்தவர் மைக் மோகன். இவர் நடித்த படங்களில் பல்வேறு பாடல்கள் ஹிட் ஆனதற்கு இவரும் ஒரு காரணம். சில காரணங்களால் திரையுலகில் இருந்து தள்ளியிருந்த இவர், தற்போதுதான் திரையுலகிற்கு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இவருக்கு, தி கோட் திரைப்படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். 

பட்ஜெட்..படக்குழு..

தி கோட் திரைப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வழங்குகிறார். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 400 கோடி. இதில் விஜய்யின் சம்பளம், 200 கோடி. இந்த தகவலை அர்ச்சனாவே ஒரு நேர்காணலில் பகிர்ந்தார். இப்படம், முதல் நாளிலேயே 100 காேடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் வெளியாகும் தி கோட் படத்தை பார்க்க, முதல் நாள் முதல் ஷோவிற்கு பலர் டிக்கெட் புக் செய்து ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “தி கோட்” திரைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News