ஜூன் மாதத்தில் வெளியாகும் 4 பான் இந்திய படங்கள்!

சமீபத்தில் ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 போன்ற பான் இந்திய திரைப்படங்கள் வெளியானது.  அதனை தொடர்ந்து இந்த மாதம் 4 பான் இந்திய படங்கள் வெளிவர உள்ளன.

1 /4

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நானியின் அண்டே சுந்தராணிகி என்கிற காமெடி திரைப்படம் வெளியாக உள்ளது.  இப்படத்தில் நானி மற்றும் நஸ்ரியா நஜிம் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது.

2 /4

777 சார்லி ஒரு கன்னட மொழி படமாகும், இதில் ரக்ஷித் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் ஜூன் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

3 /4

மேஜர் 26/11 அன்று மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை மையமாக வைத்து உருவான படம் ஆகும்.  இது தியாகி மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் கதையை சொல்லும் படியாக எடுக்கப்பட்டு உள்ளது. இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது.

4 /4

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் பான் இந்திய படமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.   இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் மற்றும் சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.   ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.