FD-யில் பணம் போடும் முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!!

Fixed Deposit அதாவது நிலையான வைப்பு, சேமிக்கான மிகவும் பிரபலமான மற்றும் எளிதான வழியாகும். FD, சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டம் அல்ல என்பதால் இதில் ஆபத்து இல்லாமல் சேமிக்க முடியும். சந்தை ஏற்ற இறக்கங்களால் இதில் எந்த வித்தியாசமும் இருக்காது. இங்கே பணமும் பாதுகாப்பாக இருக்கும். எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் எஃப்.டி போடுவதற்கு முன்பு நீங்கள் சில காரணிகளை கவனித்துக் கொள்ள வேண்டும். அவை என்ன என்பதைப் பார்க்கலாம். 

1 /5

எஃப்.டி போடுவதற்கு முன்பு நீங்கள் அதன் கால அளவை கவனிக்க வேண்டும். ஏனெனில் மெச்யூரிட்டுக்கு முன் உங்கள் எஃப்.டி.யை எடுத்தால், அதற்கு பல மடங்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் வைப்புத்தொகையில் நீங்கள் பெறும் நன்மையும் குறைகிறது. எனவே, உங்கள் பணத்தை எத்தனை காலம் FD-யில் வைக்க முடியும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

2 /5

FD-யில் கிடைக்கும் வட்டி - இது அனைவராலும் கண்காணிக்கப்படும் மிகப்பெரிய காரணியாகும். ரிசர்வ் வங்கி அவ்வப்போது வட்டி விகிதங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. எனவே இது எஃப்.டி விகிதங்களையும் பாதிக்கிறது. இது தவிர, அனைத்து வங்கிகளின் வட்டி விகிதங்களும் வேறுபட்டிருக்கும். எனவே FD-ல் பணத்தை போடுவதற்கு முன்னர் அதைச் சரிபார்க்கவும்.

3 /5

மூத்த குடிமக்களுக்கு வங்கிகளும் எஃப்.டி.க்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. எனவே நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் முதியவர்கள் இருந்தாலோ, அவர்கள் எஃப்.டி.யில் முதலீடு செய்தால் கூடுதல் நன்மை பெறலாம்.

4 /5

இது தவிர, எஃப்.டி.யிலிருந்து நீங்கள் பெறும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் நீங்கள் எஃப்.டி. மூலம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி சம்பாதித்தால், TDS கழிக்கப்படுகிறது. இங்கு நீங்கள் சம்பாதித்த மொத்த வட்டியில் 10 சதவீதத்தை செலுத்த வேண்டும். இது தவிர, உங்கள் வருமானம் வரிக்கு உட்பட்ட வரம்பில் வராவிட்டால், TDS கழிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக படிவம் 15 ஜி மற்றும் படிவம் 15 எச் ஆகியவற்றை வங்கியில் சமர்ப்பிக்கலாம்.

5 /5

முன்னதாக காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் வட்டியை திரும்பப் பெறும் ஆப்ஷன் இருந்தது. இப்போது சில வங்கிகளில் மாதந்தோறும் திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.