ஒருநாள் போட்டிகளில் இவ்வளவு பேர் இரட்டை சதங்கள் அடித்து உள்ளார்களா?

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடிப்பது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.  2010 ஆம் ஆண்டு உலகில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தார்.  அதனைத் தொடர்ந்து மொத்தமாக 5 இந்திய வீரர்கள் இரட்டை சதங்களை அடித்துள்ளனர்.  ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடித்த வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
1 /8

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் சர்மா 264 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.  2014ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கு எதிராக இந்த சாதனை படைத்தார். இது இவரது இரண்டாவது இரட்டை சதம் ஆகும்.  

2 /8

237 ரன்களுடன் நியூசிலாந்தை சேர்ந்த மார்டின் குப்டில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.  2015ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ரன்களை குவித்தார்.  

3 /8

2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வீரேந்திர சேவாக் 219 ரன்கள் குவித்தார்.  

4 /8

2015ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் 215 ரன்கள் விளாசினார்.  

5 /8

2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஜமான் ஜிம்பாவே அணிக்கு எதிராக 210 ரன்கள் அடித்தார்.  

6 /8

2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோகித் சர்மா.  

7 /8

2017 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக 208 ரன்கள் அடித்து தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் ரோஹித் ஷர்மா.  

8 /8

2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் சச்சின் டெண்டுல்கர்.