இந்திய குடிமகனுக்கும் UIDAI ஆல் வழங்கப்பட்ட ஒரு தனிப்பட்ட ஆவணம் ஆதார் அட்டை கட்டாயமாகும். Aadhaar மூலம், பேங்க் அக்கவுண்ட் தொடங்குவது போன்ற பேங்க் தொடர்பான அனைத்து வேலைகளையும் நீங்கள் செய்யலாம். அப்படி அனைத்து அரசு வசதிகளையும் பயன்படுத்த ஆதார் அட்டை கட்டாயமாகும். அனைத்து குடிமக்களுக்கும் இந்த பயோமெட்ரிக் தனித்துவ அடையாள கார்டு வழங்குவதற்காக நாட்டின் அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் இதில் சில குடிமக்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் இந்த பணி எளிதானது அல்ல. எனவே இனி சரியான ஆவண சான்று இல்லாதவர்கள் ஆதார் கார்டு பெறலாம். செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் ஆதார் கார்டு எப்படி உருவாக்குவது என்பதை பார்போம்.
முதலில் உங்கள் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் செல்லவும். அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிட்டு ஆதார் பதிவு/திருத்தம் படிவத்தை நிரப்பவும்.
பதிவாளர் அல்லது ஆதார் பிராந்திய அலுவலகத்தால் அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்ட ஒரு அறிமுகதாரரால் அங்கீகரிக்கப்பட்ட படிவத்தைப் பெறுங்கள்.
படிவத்தை ஆதார் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கவும்.கைரேகை, கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம் போன்ற உங்கள் பயோமெட்ரிக் டேட்டா வழங்கவும்.
பிறகு, ஒப்புகைச் சீட்டு உருவாக்கப்படும், பதிவு எண் அடங்கியிருக்கும், ஆதார் அட்டையின் நிலையை சரிபார்க்க இதைப் பயன்படுத்தலாம்.
ஆதார் பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு ஆதார் அட்டை தபால் மூலம் அனுப்பப்படும்.