Saturn Venus Conjunction: இன்னும் சில நாட்களில், 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. ஜோதிடத்தில் அதி முக்கியத்துவம் பெற்ற சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் ஒருவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
சனி - சுக்கிரன் இணைவு: கிரக சபெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அதனால் உருவாகும் கிரகங்களின் சேர்க்கைகளும், கிரக நிலைகளில் ஏற்படும், உதயம், அஸ்தனம், வக்ர நிலை, வக்ர நிவர்த்தி போன்ற பிற மாற்றங்களும் ராசிகள் அனைத்தையும் பாதிக்கும் நிலையில், சனி - சுக்கிரன் சேர்க்கை காரணமாக குறிப்பிட்ட 3 ராசிகள் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சனி பெயர்ச்சி 2025: சூரிய குடும்பத்தில் மிக மெதுவாக நகரும் கிரகம் சனி கிரகம். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். அதே சமயம், மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகவும் கருதப்படுகிறது. சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், 2025ம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசிக்கும் செல்வார்.
சுக்கிரன் பெயர்ச்சி 2025: ஆடம்பரத்தையும், அழகையும், வசதியையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், சுமார் ஒரு மாத காலத்தில் தனது ராசியை மாற்றிக் கொள்பவர். சுக்கிரனின் ராசி 26 நாட்களுக்கு ஒருமுறை நடக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்நிலையில், டிசம்பர் 28ம் தேதி இரவு 11:28 மணிக்கு சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார்.
சனி சுக்கிரன் யுதி: 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28ம் தேதி, சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் நிலையில், ஏற்கனவே சனி கும்ப ராசியில் இருப்பதால், சனி சுக்கிரன் இணைவு உருவாகும். காரணமாக 2025 புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது. அந்த வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
கன்னி ராசியின் ஆறாம் வீட்டில் சுக்கிரனும் சனியும் இணைவார்கள். இந்த காலகட்டத்தில்,தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இது அவர்களை சிக்கலில் தள்ளக் கூடும். மேலும், விருப்பங்கள் நிறைவேறாததால் மன அழுத்தம் ஏற்படலாம். பொருளாதார நிலையிலும் பாதகமான தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில், உடல்நலம் மீது அதிக கவனம் செலுத்துவதும் நல்லது.
தனுசு ராசியின் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை உருவாகும். இந்த காலகட்டத்தில், தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவார்கள். இது மட்டுமின்றி, கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமையையும் அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
மீன ராசியின் 12ம் வீட்டில், சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை இருக்கும். இதனால் பிரச்சனைகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை சற்று மோசமாகும். தொழில் அல்லது வேலையில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள், இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் பயணத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மறக்காதீர்கள். குடும்பத்தில் சிறிய அளவில் சண்டை சச்சர்வுகள் இருக்கும்.
ஏழரை நாட்டு சனி: நீதி கடவுள் என அழைக்கப்படும் சனி பகவான் 2025ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, கும்ப ராசியை விட்டு வெளியேறி மீன ராசிக்குள் நுழைகிறார். சனி தேவன் மீன ராசியில் நுழையும் சனி பெயர்ச்சி காரணமாக, சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகள் நீங்கும். அதே நேரத்தில் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி காலம் தொடங்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.